பக்கம் எண் :

416குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

(2)
மீனேற்றின் றுவசத்தான் றனிதுஞ்ச விழித்தோய்நின்
ஆனேற்றின் றுவசமோ வடலேற்றி னூர்தியோ
கானேற்ற பைங்கூழின் கவளமாக் கணத்தின்கண்
வானேற்ற பகிரண்டம் வாய்மடுக்க வல்லதே.

எனவாங்கு

-சுரிதகம்-
பைந்துழாய் மவுலிப் பண்ணவ னுவப்ப
அந்தணர் பழிச்சவு மறத்தின் புங்கவன்
முனியான் முனிவன் போலும்
அனைய தன்றே யான்றோர் கடனே.

    இது தரவிணைக்  கொச்சம்.    
(65)


-தரவு-
546.
மறைதங்கு திருமன்றி னடங்கண்டு மகிழ்பூத்துக்
கறைதங்கு படவரவ மிமையாது கண்விழிப்பக்
குறைதங்கு கலைநிறையிற் கோளிழைக்குங் கொல்லென்று
நிறைதங்கு தலையுவவு நிரம்பாது நிரப்பெய்தும்
பிறைதங்கு சடைக்கற்றைப் பெரும்பற்றப் புலியூரோய்.


    (2) மீனேற்றின் துவசத்தான் - மன்மதன். ஆனேற்றின் துவசம்; இன்: வேண்டாவழிச் சாரியை. கான் - காடு பைங்கூழின் கவளமா - பசும் பயிராகிய உணவாக. தருமதேவதையாகிய இடபம் துவசமாகவும் திருமால் வாகனமாகவும் இருத்தலை நினைந்து இங்ஙனம் கூறினார். எனவாங்கு என்பது தனிச்சொல்.

    பைந்துழாய் மவுலிப் பண்ணவன் - திருமால். உலகை உண்டவராதலின் அவர் உவந்தார். பழிச்ச - வாழ்த்த. அறத்தின் புங்கவன் - கொடியாக உள்ள தருமதேவதை. மனியான் முனிவன் போலும் - சினங்கொள்ளாதவனாயினும் சிறிதே சினங்கொள்வான் போலும்; போலுமென்றது ஐயத்தைக் குறித்தது. அனையது - அங்ஙனம் முனிதல். ஆன்றோர் கடன் அன்று; ஆதலின், முனியானென்க.

    கொடியும் ஊர்தியுமாக உள்ளார் இருவரையும் புகழாமல் ஊர்தியை மாத்திரம் புகழ்தலின் அறக்கடவுள் முனிதற்குக் காரணமுளதாயிற்று. அங்ஙனம் முனிதல் ஆன்றோர் கடனன்றாதலின் அதனை யொழிந்தனனென்பது கருத்து.

    546. (தரவு.) படவரவமென்றது பதஞ்சலியை தலையுவவு நிரம்பாது - பூர்ணிமைக்குரிய முழு உருவத்தையும் பெறாமல். நிரப்பு - கலை குறைதலாகிய வறுமை.