இது தரவு ஒன்றும் தாழிசை மூன்றும் இடையிடை தனிச்சொல்லும் பெற்றுச் சுரிதகத்தால் இறுதலின், சிஃறாழிசைக் கொச்சகம்.
எனவாங்கு என்றது தனிச்சொல்.
(தாழிசை.) 1. பொன்மத்து - ஒருவகை ஊமத்தமலர். கடு - விடம். முழை: 673.
அதா அன்று என்பது தனிச்சொல்.
2. புகர்முகன் - விநாயகக் கடவுள். முழவுபோன்ற தோளாகிய மலை. அதா அன்று என்பது தனிச்சொல்.
3. வேல் விடலை - முருகக் கடவுள். தன்னென்றது கயாசுரனை. விடர் - பள்ளம். கயாசுரனோடு இறைவன் போர்புரிந்த செய்தி கந்தபுராணம், ததீசி யுத்தரப் படலம், 128-146-ஆம் செய்யுட்களால் அறியப்படும்.
அதனால் என்பது தனிச்சொல்.
(சுரிதகம்.) சிலை: புருவம். தடங்கண் - உமாதேவியார்.