இது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.
-தரவு-
548. | 1.சூன்முகத்த கரிமுகங்க ணிரைத்தார்ப்பத் தொடுகடல்வாய் |
| வான்முகத்த மழைக்குலங்கண் மறிபுனல்வாய் மடுத்தென்னக் |
| கான்முகத்த மதுகரத்தின் குலமீண்டிக் கடிமலர்வாய்த் |
| தேன்முகக்கும் பொழிற்றில்லைத் திருச்சிற்றம் பலத்துறைவோய். |
2. | புற்புதமுந் தொல்வெய்த நிலையெய்தாப் புலையுடம்பின் |
| இற்புதவு திறந்திறவா வின்பவீ டெய்தவொரு |
| நற்புதவு திறந்தன்ன நறும்பொதுவி னங்கையுடன் |
| அற்புதவு மானந்த நடம்பயிலு மறவோய்கேள். |
5. அடிகளைத் தாம் மறந்து. மறித்தலை - ஆட்டின் தலை. மாமடிகள் - மாமனார்; என்றது தக்கனை (355, 375).
6. உலகு பயன் கொள்ளாது; உலகு - உயர்ந்தோர்.
அதனால் என்றது தனிச்சொல்.
(சுரிதகம்) அம்ம: வியப்பிடைச் சொல். அரிதே: ஏகாரம் தேற்றம். அங்கனம் அரிய நின்தன்மை எங்கள்பால் எளியதாவதற்குக் காரணம் நின் பெருங்கருணையே யாகும்.
548. (தரவு.) 1. சுரிமுகங்கள் - சங்குகள். நிரைத்து - வரிசையாக இருந்து. மழைக்குலங்கள் - மேகக் கூட்டங்கள். கான்முகத்த மதுகரத்தின் குலம் - காட்டிலேயுள்ள வண்டின் கூட்டம். கடி - நறுமணம். வண்டின் கூட்டத்ததிற்கு மேகம் உவமை; பொழிலுக்குக் கடல் உவமை; “கடல் போற் றோன்றல காடிறந்தோரே” (அகநா. 1:19)
2. புற்புதமும் தொலைவு எய்த - நிலையாமையில் நீர்க்குமிழியும் உவமையாகாமல் தோல்வியுற. புலை - இழிவு. உடம்பின் நிலையாமைக்கு நீர்க்குமிழியை உவமை கூறுதல் மரபு; “படுமழை மொக்குளிற் பல்காலுந்