-தாழிசை- 1. | எவ்விடத்தி லெப்பொருளு மொருங்குண்ண விருக்குநீ | | வெவ்விடத்தை யெடுத்தமுது செய்ததுமோர் வியப்பாமே. | 2. | எண்பயிலா வுலகடங்க வொருநொடியி லெரித்திடுநீ | | விண்பயிலு மெயின்மூன்று மெரித்ததுமோர் வீறாமே. | 3. | பெருவெள்ளப் பகிரண்டந் தரித்திடுநீ பெயர்த்துமலை | | பொருவெள்ளப் புனற்கங்கை தரித்ததுமோர் புகழாமே. | 4. | மாயையினா லனைத்துலகு மயக்குநீ மாமுனிவர் | | சேயிழையார் சிலர்தம்மை மயக்கியதோர் சிறப்பாமே. | 5. | மேதக்க புவனங்க டொலைத்திடுநீ வெகுண்டாய்போல் | | மாதக்கன் பெருவேள்வி தொலைத்ததுமோர் வன்மையே. | 6. | ஓருருவாய் நிறைந்த நீ யிருவர்க்கன் றுணர்வரிய | | பேருருவொன் றுடையையாய் நின்றதுமோர் பெருமையே. |
-அராகம்- 1. | அறிவினி லறிபவ ரறிவதை யலதொரு | | குறியினி லறிவுறு குறியினையலை. |
தோன்றிக,் கெடுமிதோர் யாக்கை” (நாலடி. 27); “மாரி மொக்குளின் மாய்ந்து” (சீவக, 409.) உடம்பின் இல் புதவு திறந்து - உடம்பாகிய வீட்டின் வாயிலைத் திறந்துகொண்டு; “புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட், டுச்சி லிருந்த வுயிர்க்கு” (குறள், 340). (பி-ம்.) ‘இற்புதவு புறந்து’. இன்ப வீடு - முத்தி. புதவு - வாயில். பொடுவில் - அம்பலத்தில். அற்பு உதவும் - அன்பை அளிக்கும். நடன தரிசனம் செய்தவர் உளமுருகி அன்பு பூண்பராதலின் ‘அற்புதவுமானந்த நடம்’ என்றார்; 503-ஆம் செய்யுளைப் பார்க்க. அறவோய் - தரும மூர்த்தி; “அறவன் கழல்சேர்ந் தன்போடின்ப மடைவாரே” (தே. திருஞா. அரிசிற்கரைப்புத்தூர்.)
(தாழிசை.) 1. வியப்பு ஆமே - வியப்பு ஆகுமா? ஆகாதென்றபடி.
2. உலகடங்க எரித்தலாவது சர்வ சங்காரம் செய்தல். எயில் மூன்று - திரிபுரங்கள்.
3. பெருவெள்ளத்தையுடைய பகிரண்டத்தை. இறைவன் அண்டங்கள் மாலையாக அணிந்தானென்பர்; தாராக வண்டந் தொடுத்தணிந்தார்” (தக்க. 772.)
4. முனிவர் சேயிழையார் - தாருகாவனத்து முனிவருடைய மனைவிமார்.(அராகம்.) 1. ஒரு குறியினில் - ஓர் அடையாளத்தால்; ஒரு பெயராலெனலுமாம். குறியினை அலை - உருவத்தை உடையாயல்லை.
|