பக்கம் எண் :

42குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

இசைந்திடு தேவை நினைந்தன வென்ன
   இரங்கிடு மேகலையோ
டிடுகிடை யாட வியற்கை மணம்பொதி
   இதழ்வழி தேறலினோ

டசைந்தொசி கின்ற பசுங்கொடி யெனவினி
   தாடுக செங்கீரை
அவனி தழைந்திட மவுலி புனைந்தவள்
   ஆடுக செங்கீரை.    
(7)

21.
பரிமள மூறிய வுச்சியின் முச்சி
   பதிந்தா டச்சுடர்பொற்
பட்டமு டன்சிறு சுட்டியும் வெயிலொடு
   பனிவெண் ணிலவாடத்

திருநுதன் மீதெழு குறுவெயர் வாடத்
   தெய்வம ணங்கமழும்
திருமே னியின்முழு மரகத வொளியெண்
   டிக்கும்வி ரிந்தாடக்

கருவிளை நாறு குதம்பை த்தும்பிய
   காது தழைந்தாடக்
கதிர்வெண் முறுவ லரும்ப மலர்ந்திடு
   கமலத் திருமுகநின்

அருள்விழி யொடும்பவளர் கருணை பொழிந்திட
   ஆடுக செங்கீரை
அவனி தழைந்திட மவுலி புனைந்தவள்
   ஆடுக செங்கீரை.    
(8)

    (3) தேவை - சிவபெருமானை. இரங்கிடும் - ஒலிக்கும்; வருந்துமென்பது வேறு பொருள். இடுகு இடை - ஒடுங்கிய இடை. இதழ் வழிதேறல்: 14.

    21. (அடி, 1) முச்சி - கொண்டை. பட்டத்தால் வெயிலும், சுட்டியால் நிலவும் ஆட.

    (3) கருவிளையென்றது கண்களை, குதம்பை - காதணி. திருவிழிகள் கதளவும் சென்றமையின் கருவிளை நாறு குதம்பையென்று கூறினர். தழைந்து - தாழ்ந்து.