பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை425

555.
கூகா வென்று குரைப்பதல் லாற்சமன்
வாவா வென்னின் வரேமென வல்லிரே
தேவே சன்பயி றில்லையி னெல்லையிற்
சேர்வீ ரேலது செய்யவும் வல்லிரே.

    இஃது அளவடி நான்காய் வந்தமையாற் கலிவிருத்தம்.

    இஃது அடிதோறும் இரண்டாமெழுத்து நெட்டெழுத்து வரத்தொடுத்தமையால் நெடிலெதுகை. முதலெழுத்து நெட்டெழுத்தே வரத் தொடுத்தமையால் நெடின் மோனையுமாம். மூன்றாமடியும் நான்காமடியும் முதலெழுத்து அனுவெழுத்தாய் வந்தமையின் அனுமோனை.    
(75)

556.
வையமீன்ற மறைக்கிழவனும்    
கொய்துழாய்மவுலிக் குணக்கொண்டலும்    
தருவார்நீழற் றார்வேந்தனும்    
வரன்முறைதாழ்ந்து வாழ்த்திசைப்ப    
மைதீருணர்வின் மழமுனிவனும்    
பையரவரசும் பணிந்திறைஞ்ச    
இமயம்பயந்த விளங்கொடியொடும்    
தமனியப்பொதுவிற் றாண்டவம்புரி    
தில்லைவாணநின் றிருவடிக்கீழ்ச்    
சொல்லுவதொன்றிது சொலக்கேண்மதி    
கமலலோசன்ன் கண்படுக்கும்    
அமளியைநின்மருங் காதரித்தனை    

    555. கூகாவென்று குரைபத்தால் - யமன் வந்த காலத்தில் அஞ்சிக் கூகாவென்று கதறுவதல்லாமல்; “கூகாவெனவென்கிளைகூ டியழ” (கந்தரநுபூதி.)வரேமென வல்லிரே - வாரோமெனக் கூறும் வன்மை உடையீராவீரோ? அது செய்யவும் - வாரோமெனக் கூறுதற்கும். வல்லிரே: ஏ, தேற்றம்.

    556. மறைக்கிழவன் - பிரமதேவர். குணக்கொண்டல் - குணத்திற் சிறந்த மேகம் போன்ற திருமால்; “உயர்வற வுயர்நல முடையவன்” (திருவாய்மொழி). தரு - கற்பகம். வேந்தன் - இந்திரன். மைதீர் உணர்வின் - குற்றம் தீர்ந்த மெய்ஞ்ஞானத்தையுடைய. மழமுனிவன் - உபமன்னியு முனிவராகிய குழந்தையையுடைய வியாக்கிரபாதர்; மழவை யுடைய முனிவனென்க. பையர வரசு - பதஞ்சலி முனிவர். பமல்லோசன்ன் - திருமால். அமளியை - படுக்கையாகிய ஆதிசேடனை; என்றது அவனது