இது சிந்தடி வஞ்சிப்பா.
அவதாரமாகிய பதஞ்சலி முனிவரை. செங்கேழ் - செந்நிறத்தையுடைய. அவன் - திருமால். ஆழிசசேக்கையை - திருப்பாற்கடலாகிய உறைவிடத்தை. புதல்வன் - உபமன்னியு முனிவர். உபமன்னியுவுக்குப் பாற்கடலீந்தது: 463, 562; “பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட லீந்தபிரான்” (திருப்பல்லாண்டு.) பாயலும் அமளியும் இன்றி - படுக்கையும் கட்டிலும் இல்லாமல் (463). நின் வாயிலின் வைகினனென்றது தில்லைத் திருக்கோயிலின் முன்றிலில் கோவிந்தராசப் பெருமாள் எழுந்தருளி யிருப்பதை நினைந்தது. அத் திருமனை - அந்த அழகிய இருப்பிடமாகிய பாற்கடல். வீடு - முத்தி, இல்லம்.
557. தாமரைக் கண்ணன் - திருமால். அடித் தாமரையின் கண் விழிக் கமலம் தர. சுடர்ப்பரிதி - ஒளி வீசும் சக்கராயுத்ததை; தாமரைக்கு இயைபுடையதாகலின் சுடர்வீசும் சூரியனையென வேறொரு பொருளும் தோற்றியது. உதவியின் வரைத்தோ: “உதவி வரைத்தன் றுதவி யுதவி, செயப்பட்டார் சால்பின் வரைத்து” (குறள், 105.)