பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை427

558.
(1)    பிணியென்று பெயராமே  
      துணிநின்று தவஞ்செய்வீர்
      அணிமன்ற லுமைபாகன்
      மணிமன்று பணியீரே.
(2)    என்னென்று பெயராமே  
      கன்னின்று தவஞ்செய்வீர்
      நன்மன்ற லுமைபாகன்
      பொன்மன்று பணியீரே.
(3)    அரிதென்று பெயராமே  
      வரைநின்று தவஞ்செய்வீர்
      உருமன்ற லுமைபாகன்
      திருமன்று பணியீரே.

    இது குறளடி நான்காய் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்தமையால் வஞ்சித் தாழிசை.    
(78)

559.
பொன்செய் மன்றில்வாழ்
கொன்செய் கோலத்தான்
மின்செய் தாடொழார்
என்செய் கிற்பரே.

    இது குறளடி நான்காய் வந்தமையால் வஞ்சித்துறை.    
(79)

560.
ஒன்றி னம்பர லோகமே
ஒன்றி னம்பர லோகமே
சென்று மேவருந் தில்லையே
சென்று மேவருந் தில்லையே.

    இது சிந்தடி நான்காய் வந்தமையால் வஞ்சி விருத்தம்.    
(80)


    558. (1) பிணியென்று பெயராமே - நோய்க்கு இடமாகுமென்று அஞ்சி நீங்காமல். துணி - பிளந்த பாறை. ‘துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு தவஞ்செய்பவர்களே, இவ்வளவு துயரின்றி எளிதிலே பயன் பெறும்வழி இஃதாகும்’ என்று கூறியபடி.

    (2) கல் - மலை.

    559. கொன் - பெருமை.

    560. மேவருந் தில்லை சென்றும் - யாவரும் மேவுதற்கு அரிய தில்லைத் தலத்தின்கண் சென்றோம்; (ஆதலின்) பரலோகமே ஒன்றினம் - எல்லா