பக்கம் எண் :

428குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

561.
அரசியல் கோடா தரனடியார்ப் பேணும் 
முரசிய றானைவேன் மன்னர் - பரசோன் 
கழலிணை பொதுவில்காப் பாக 
வழிவழி சிறந்து வாழியர் பெரிதே. 

    இது முன்னர் வெண்பாவும் பின்னர் அகவலும் புறநிலை வாழ்த்தாய் வருதலின் புறநிலை வாழ்த்து மருட்பா. வெள்ளடியும் ஆசிரியவடியும் சமமாகலின் இது சமனிலை.    
(81)

562.
பருந்தளிக்கு முத்தலைவேற் பண்ணவற்கே யன்றி
விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் - திருந்த
வலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்
குலமுனி புதல்வனுக் கீந்த
அலைகட லாகுமிவி வாயிழை நோக்கே.

    இதுவும் அவ்வாறே கைக்கிளைப் பொருள்மேல் வருதலின் கைக்கிளை மருட்பா. வெள்ளடி குறைந்து ஆசிரியவடி மிகுதலின் இது வியனிலை.    
(82)


வற்றிற்கும் மேலான உலகமாகிய முத்தியினிடத்தே பொருந்தினேமாயினேம்; இனம் பரலோகம் ஒன்று - இன்னும் வேறு உலகம் ஒன்றின்கண். சென்றுமே வருந்து இல்லை. சென்று வருந்துதல் எம்பால் இல்லை.

    தில்லையின்கண் சென்ற மாத்திரத்திலே முத்தி பெறுதல் துணிவாதலின் இங்ஙனம் கூறினார்.

    இச்செய்யுளுக்குப் பிறவாறு பொருள் கூறுவாரும் உளர்.

    561. அரசரை, வழிபடு தெய்வம் காப்ப வாழ்கவென வாழ்த்தியது.

    முரசு இயல் தானை - முரசையும் செல்லுகின்ற படையையும் உடைய. பரசோன் - மழுப்படையையுடைய சிவபெருமான். பொது இல் காப்பு - சிறப்பான பாதுகாப்பு; தனித்துணையுமாம்.

    562. தலைவியின் குறிப்புணர்ந்து கூறியது. முத்தலைவேல் - திரிசூலம். பண்ணவற்கே யன்றி விண்ணோர் பிறர்க்கும் விருந்தளிக்கும்; விருந்தளிக்கும்: முற்று. ஆலமும் அமுதமும் ஒருங்கே ஈயு மென்றவாறு. தலைவியின் மருட்பார்வையை ஆலமென்றும் அருட்பார்வையை அமுதமென்றும், உருவகம் செய்தல் மரபு. குலமுனி புதல்வன் - உபமன்னியு முனிவர். அலைகடல் - பாற்கடல். கண்களுக்குப் பாற்கடல் உவமை: 148, 668.