இது செவியறிவுறூஉ மருட்பா.
சிதம்பரச் செய்யுட்கோவை முற்றிற்று.
563. நமரங்காள்: 506, 520. உயிம்மின் - பிழையுங்கள்.
564. தலைவற்குச் சென்னி தாழ்த்துமின். வாழ்த்துமினென வாக்காலும், நினைமினென மனத்தாலும், சென்னிதாழ்த்துமின் எனக் காயத்தாலும் செய்யும் தொண்டுகளைக் கூறியது முக்கரணத்தாலும் வழிபடல் வேண்டுமென்று புலப்படுத்தியபடி. புறநெறி ஆற்றாது - அறத்தாறல்லாத நெறியினின்று செயல் புரியாமல். துறை அறி மாந்தர் - தாம் ஒழுகும்வழி இஃதென அறிந்த அறிஞர்.