பக்கம் எண் :

430பண்டார மும்மணிக்கோவை

பண்டார மும்மணிக்கோவை

நேரிசை வெண்பா
565.
எண்டிசைக்குஞ் சூளா மணிமாசி லாமணிசீர்
கொண்டிசைக்கு மும்மணிக் கோவைக்குக் - கண்டிகைபொற்
பைந்நாகத் தானனத்தான் பாற்கடலான் போற்றவருள்
கைந்நாகத் தானனத்தான் காப்பு.    
(1)

நேரிசை யாசிரியப்பா
566.
பூமலி சததளப் பொன்னந் தாதுகு
காமர்பீ டிகையிற் கருணையோடு பொலிந்து
வீற்றுவீற் றமைந்த விரிதலைப் புவனம்
பாற்பட வகுத்த பழமறைக் கிழவனும்
5
மதுக்குட முடைந்தாங் கிதழ்க்கடை திறந்து
பிரசமூற் றிருந்து முருகுகொப் புளிப்ப
வண்டுழு துழக்குந் தண்டுழா யலங்கற்
புரவுபூண் டகிலம் பொதுக்கடிந் தளிக்கும்
கருணைபூத் தலர்ந்த கமலக் கண்ணனும்


    565. சூளாமணி - முடிமணி. இசைக்கும் - கட்டும், கூறும். கண்டிகை பொற் பைந்நாகத்தான் - உருத்திராட்ச மாலையையும், பொலிவு பெற்ற படத்தையுடைய நாகத்தையும் அணிந்த சிவபெருமான்; கண்டிகை - கழுத்தணியுமாம். (பி-ம்.) ‘கண்டிகைப்பொற்’. னத்தான் - பிரமதேவர். பாற்கடலான் - திருமால். இம்மூவரும் போற்ற வென்க. சிவபெருமான் திரிபுர தகனம் செய்ததற்கு முன் விநாயக பூசை செய்த வரலாற்றை நினைந்து அவரும் போற்றியதாக அமைத்தார். அனத்தானும் பாற்கடலானும் போற்ற நாகத்தான் அருளிய என்று கூட்டிப் பொருளுரைத்தலும் பொருந்தும். கைந் நாகத்து ஆனனத்தான் - யானை முகத்தையுடைய விநாயகக் கடவுள்.

    566. (அடி, 1-16) சிவபெருமானே ஆசிரிய மூர்த்தியாக வந்தனரென்பது கூறப்படும்.

    (1-4) சத தளம் - நூறு இதழ்களையுடைய. பீடிகை - ஆசனம். வீற்று வீற்று அமைந்த - வேறு வேறாகப் பொருந்திய, பழமறைக் கிழவன் - பிரமதேவர.்

    (5-9) தேன் நிறைந்த குடம் உடைந்தாற்போல. இதழ்க்கடை - இதழாகிய வாயில். பிரசம் - தேன். முருகு - நறுமணம். புரவு - காக்