| நான்மறை நவின்ற நற்பொரு ளிவையென | | மோனவா சகத்தான் முப்பொரு ணவிற்றுபு | 30 | நன்னலம் புரியு ஞானப் பிரகாசன் | | இன்னருள் பழுத்த செந்நெறிச் செல்வன் | | திருக்கிளர் ஞானத் திருந்திழைக் கணியாம் | | அருட்பெருஞ் சைவத் தருங்கல னாப்பண் | | ஆசற விளங்கு மாசி லாமணி | 35 | அமண்மா சறுத்த கவுணியர் பெருந்தகை | | பிள்ளைமை விடுத்த தள்ளரும் பருவத் | | துள்ளதன் படிவ முணர்த்துவ கடுப்ப | | மாநிலத் தமர்ந்த ஞானசம் பந்தன் | | பொன்னடிக் கமலஞ் சென்னிவைத் திறைஞ்சுதும் | 40 | இருகால் சுமந்த வொருபெருஞ் சேவகத் | | தைம்புலக் களிறுந் தம்புல திழுப்ப | | ஊனிடைப் பிறவிக் கானகத் துழலா | | தேனைய முத்திநா டெய்தவோர் | | |
வழிபடுதல் மரபாதலின் இங்கே மாசிலாமணி தேசிகரை ஞானப்பிரகாச தேசிகராகவே கூறினார்.
(28-31) முப்பொருள் - திரிபதார்த்தம்; பதிபசுபாசம். ஞானப்பிரகாசன் - கமலை ஞானப் பிரகாசர்.
(32-4) ஞானத் திருந்திழைக்கு - ஞானமாகிய பெண்ணுக்கு. அவளுக்கு ஆபரணமாகிய சைவத்தின் நடுவில் விளங்கும் நாயகமணியாகிய மாசிலாமணி.
(35-9) தரும்புரத்திற் கோயில் கொண்டெழுந்தருளி யிருப்பவரும் கமலை ஞானப் பிரகாச தேசிகருக்கு மாணாக்கருமான ஆசிரியர் திருஞான சம்பந்த தேசிகரென்னும் திருநாமமுடையராதலின் அவ்வியைபுபற்றித் திருஞானசம்பந்த மூர்த்தியே தம் பிள்ளைத் திருக்கோலத்தை நீத்து முதிய கோலத்தில் வந்தாற் போன்றவரென்பர். அமண்மாசு - சமண சமயமாகிய குற்றம். கவுணியர் பெருந்தகை - திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்.
(40-44) இருகால் சுமந்த - இரண்டு கால்களாற் சுமக்கப் பெற்ற. சேவகம் - யானை துயிலுமிடம்; புலன்களைக் களிறென்ற தற்கேற்ப உடலை இங்ஙனம் உருவகம் செய்தார். ஐம்புலக்களிறு - ஐம்பொறிகளாகிய யானைகள்; “உரனென்னுந் தோட்டியானோரைந்துங் காப்பான்” (குறள், 24); “ஐம்புல வேழத்தின் வெந்தொழில் வீய” (ஞானாமிர்தம்.) தம் புலத்து இழுப்ப - தமக்குரிய இடத்தின் கண்ணே இழுக்க.
|