நேரிசை வெண்பா 567. | என்வடிவ நின்வடிவாக் கொண்டா யெளியேற்குன் | | றன்வடிவ நல்கத் தகுங்கண்டாய் - மன்வடிவால் | | வெம்பந்த நீக்கும் விமலநீ மெய்ஞ்ஞான | | |
கட்டளைக் கலித்துறை 568. | தானின் றெனைத்தனக் குள்ளே யொளிக்குமென் றன்மைநிற்க | | யானின்ற போதெனக் குள்ளே யொளித்திடு மிப்பரிசே | | வானின்ற சின்மய மாமாசி லாமணி மன்னுந்தன்மை | | நானின்று கண்டனன் காணே னிதற்கொத்த நன்மணியே. |
நேரிசை யாசிரியப்பா 569. | மணிவடஞ் சுமந்த புணர்முலைக் கொதுங்கி | | ஈயா மாக்க டீமொழி கவர்ந்த |
பிறவியாகிய கானகத்தில். முத்தியாகிய நாட்டை அடைய. ஞானவாரணம் - ஞானமாகிய யானை; 1:70. காட்டிற்கு இழுத்துச் செல்லும் ஐந்து யானைகளினின்றும் என்னை விடுவித்து நாட்டிற்குச் செலுத்தும் யானை ஒன்றை அளிப்பாயாக வென்றார். இது முற்றுருவகம்.
567. என்வடிவம் நின்வடிவாகக் கொண்டாய் - என்னுடைய வடிவாகிய மானிட உருவத்தை நின்வடிவாகக் கொண்டாய்; “எம்மனோர் போல வினிதெழுந் தருளி” (566) என்று முன்னர்க் கூறியதுங் காண்க. உன்றன் வடிவம் - ஞானவடிவம். பந்தம் பாசத்தள். மெய்ஞ்ஞான சம்பந்தன் - உண்மையான ஞான சம்பந்தம் செய்பவன். சம்பந்தமாவது கொள்ளுதலுங் கொடுத்தலு மாதலின், இங்ஙனம் கூறினார்; “சம்பந்தப் பெயர் தரித்தமை யாலெமைச், சம்பந் தஞ்செயத் தகுந்தகு நினக்கே” (572).
568. சிவபோதம் முனைத்து நிற்கையில் சீவபோதம் ஒழிதலையும், சீவபோதம் முனைத்து நிற்கையில் சிவபோதம் மறைதலையும் கூறுவர்.
தான் நின்று - சிவபோதம் நிலைபெற்று. என்த தனக்குள்ளே ஒளிக்கும் - ஆன்ம போதத்தைத் தனக்குள்ளே அடக்கித் தான் வியாபகமாக நிற்கும். என் தன்மை நிற்க - சீவபோதம் நிலைபெற. யான் நின்றபோது - ஆணவத்தால் ஆன்ம்போதம் தலையெடுத்த காலத்தில். எனக்குள்ளே ஒளித்திடும் - என்னுள் மறைந்து நிற்கும். சின்மயம் - ஞான உருவம். ஒருமணி தன் ஒளியில் எல்லாவற்றையும் அடக்கி நிற்றலே இயல்பு; இந்த மணி ஒருகால் அடக்கியும் ஒருகால் அடங்கியும் இருத்தல் வியப்பென்றார்; 577, 682-ஆம் செய்யுட்களைப் பார்க்க.
570. (அடி, 1-11) தருமபுரத்தின் சிறப்பு.
ஒதுங்கி - இளைத்து. ஈயா மாக்கள் தீமொழி யென்றது இல்லையென்பதை. இல்லையாகிய இடை. பட்டம் - நீர்நிலை: “தண்பட்ட மேவும் வயல்”
|