| சிற்றிடை படைத்த பேரமர்க் கண்ணியர் |
| கரைகொன் றிரங்குந் திரைசெய்நீர்ப் பட்டத்து |
5 | மைவிழி சேப்பச் செவ்வாய் விளர்ப்பக் |
| கருங்குழல் சரிய வெள்வளை கலிப்பச் |
| சீராட் டயரு நீராட் டயர்ந்து |
| புலவியிற் றீர்ந்து கலவியிற் றிளைக்கும் |
| நீரர மகளிர் பேரெழில் காட்ட |
10 | மருதம்வீற் றிருந்து பெருவளஞ் சுரக்கும் |
| தருமையம் பதிவாழ் சற்குரு ராய |
| ஒள்ளொளி பரப்பும் வெள்ளிவே தண்டத் |
| தொருபாற் பொலிந்த மரகதங் கவினச் |
| சுடர்விடு செங்கதிர்க் கடவுண்மா மணிக்கு |
15 | விளங்கெழின் மிடற்றோர் களங்கமுண் டென்பவக் |
| காசுலா மலினங் கரந்தகா ரணத்தால் |
| மாசிலா மணியென வண்பெயர் நிறீஇ |
| மேன்மையோ டமர்ந்த ஞானசம் பந்த |
| ஈண்டுனைத் தமியனேன் வேண்டுவ தியாதெனின் |
20 | அந்நிய மென்று மநநிய மென்றும் |
| இந்நிலை யிரண்டு மெய்திற் றென்றும் |
| பல்வே றுரைக்குநர் சொல்வழிப் படாது |
| தவ்வியம் பழுத்த சைவசித் தாந்தத் |
| திறவா நிலைமைபெற் றின்பமார்ந் திருக்கும் |
25 | பிறவா நன்னெறி பெறப்புரி வதுவே |