பக்கம் எண் :

பண்டார மும்மணிக்கோவை437

புருட நாமம் புனைந்தன மாயினும்
20
அத்தநிற் குறிப்பிற் சத்திகள் யாமே
புருடனைச் சத்தியிற் புணர்த்தனை யன்னதற்
கொருகாட் டென்ப புருடோத் தமனே
உன்னுட னெம்மையு மொப்பெனப் படுத்து
முன்னர்க் கூறிய முறைமையிற் சிற்சில
25
முழுவது மொவ்வா தொழியினு மொழிக
உயர்ந்தோன் றலைவ னொத்தோட் புணரினும்
இழிந்தோட் புணரினும் மிழிபெனப் படாதே
ஆதலின் யாமுனைக் காதலித் தனமாற்
காதலி னெமையருட் கைப்பிடித் தருளி
30
ஒருவரு முணராப் பரம வீட்டில்
இருளறை திறந்த பெருவெளி மண்டபத்
துயர்நா தாந்தத் திருமல ரமளியிற்
புளகமெய் போர்ப்ப மொழிதடு மாற
உள்ளொலி நாதப் புள்ளொலி முழங்க
35
ஞானவா ரமுத பானம தார்ந்து
கருவிகள் கழன்று பரவச மாகிப்
பரமா னந்தப் பரவையுட் படிந்து

    (19) புருடனென்னும் நாம்ம் ஆன்மாவுக்குரியது. (பி-ம்.) ‘புருடநாமமும்’.

    (19-20) புருடனென்னும் பெயரை நாங்கள் உடையேமாயினும், நின்னை நோக்கியவிடத்து நாங்கள் சக்திகளே.

    (21-2) புருடனைச் சக்தியைப் போலத் தொடர்பு படுத்தினை. காட்டு - உதாரணம். புருடோத்தமன் - திருமால்.

    (23) (பி-ம்.) ‘ஒப்பனைப்படுத்து’.

    (26-7) இவ்வடிகளிலுள்ள செய்தி, “ஒன்றே வேறே யென்றிரு பால்வயின், ஒன்றி யுயர்ந்த பால தாணையின், ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப, மிக்கோனாயினுங் கடிவரையின்றே” (தொல். களவு, 2) என்னும் சூத்திரத்தை நினைந்து கூறியது.

    (33) புளகம் - மயிர்க்கூச்செறிதல்.

    (30-37) இவ்வடிகளில் பேரின்பவுணர்ச்சியைச் சிற்றின்பம் போலத் தோற்றும் வண்ணம் சொற்றொடரமைத்தனர்.