பக்கம் எண் :

44குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வேறு
23.
சங்குகி டந்தத டங்கைநெ டும்புயல்
   தங்காய் பங்காயோர்
தமனிய மலைபடர் கொடியென வடிவுத
   ழைந்தா யெந்தாயென்

றங்கணெ டும்புவ னங்கடொ ழுந்தொறும்
   அஞ்சே லென்றோதும்
அபயமும் வரதமு முபயமு முடையவ
   ணங்கே வெங்கோபக்
    
கங்குன்ம தங்கய மங்குல டங்கவி
   டுங்கா மன்சேமக்
கயல்குடி புகுமொரு துகிலிகை யெனநின
   கண்போ லுஞ்சாயற்    

செங்கய றங்குபொ லன்கொடி மின்கொடி
   செங்கோ செங்கீரை
தெளிதமிழ் மரையில் வளருமொ ரிளமயில்
   செங்கோ செங்கீரை.    
(10)

    23. (சந்தக் குழிப்பு.) தந்தன தந்தன தந்தன தந்தன தந்தா தந்தான தன தன தனதன தனதன தனதன தந்தா தந்தான.

    (அடி, 1) புயல் - திருமால். தங்காய் - தங்கையே. தமனிய மலை - சிவபெருமான். எந்தாய் - எம் தாயே (553.)

    (2) அம் கண் - அழகிய இடத்தையுடைய. அபயமும் வரதமுமாகிய உபயமும்; உபயம் - இரண்டு.

    (3) மதகய மென்றது மதங்கயமெனச் சந்தம் நோக்கி நின்றது. மதங்கயமாகிய மங்குல்; மங்குல் - இருள்; மன்மதனுக்கு இருள் யானை. துகிலிகை - துவசம். (பி-ம்.) ‘துகிலிகையனநின்.’

    (3-4) பொலன் கொடியையுடைய மின் கொடி, காமனுடைய கயற்கொடி போன்ற கயற்கொடியை யுடையாயென்றபடி. எனத் தங்கு என இயைக்க. அங்கயற்கண்ணம்மை யதலின், ‘கண்போலுஞ் சாயற் செங்கயல்’ என்றார்.