30. | என்பொருட் டாயினு மென்பொருட் டன்றிது | | நின்பொருட் டொருபொரு ணிகழ்த்துவன் கேண்மோ | | வறிஞ னோம்பிய செறுவொன் றேய்ப்பப் | | பருவ நோக்காப் பவந்தொறும் பவந்தொறும் | | இருவினைப் போகமு மெற்கொண் டார்த்துபு | 35. | மற்றென் னுருக்கொடு முற்றனை யாலினித் | | தாகமின் றாகலிற் பாகமின் றெனக்கென | | அருளா தொழியினும் பரிபவ நினக்கே | | சேய்முகம் பாராள் சினந்தன ளேகினும் | | போயெடுத் தாற்றுமத் தாய்மீட் டன்றே | 40. | ஆதலி னெனைப்போ லடிக்கடி தோன்றலை | | ஈதியா லின்னரு ளின்னண மெனக்கே | | சமையந் தீர்ந்த தனிப்பொரு டெரித்தற் | | கமையந் தேர்கலை யருளுதி யாயினும் | | எண்ணீ ராண்டைக் கிலக்கமிட் டிருந்த | 45. | அண்ணலங் குமரற் காருயிர் தோற்ற | | கடாவிடை யார்திபாற் கண்டும் | | அடாதென மொழிகுந ரார்கொன்மற் றுனையே. |
(32) செறு - வயல். வறிஞனோம்பிய செறு: “வையக முழுவதும் வறிஞ னோம்புமோர், செய்யெனக் காத்து” (கம்ப. அரசியற். 12); “மிடிய னொருசெய் விளையக் காக்குஞ் செயல் போல” (பிரபு. மாயை யுற்பத்தி. 49.)
(33) பருவம் நோக்கா - என்னுடைய பக்குவத்தை நோக்கி.
(35) உருக்கொடும்; உம்மை இறந்தது தழுவியது.
(36) தாகமின்று - அடியேனுக்கு விருப்பமில்லை. பாகம் - பக்குவம்.
(37) பரிபவம் - அவமானம்.
(38) சேய் - பிள்ளை.
(39) ஆற்றும் - ஆற்றுவாள்.
(41) இன்னருள் ஈதி. இன்னணம் - இப்பொழுதே; இச் சொல் இப்பொருளிற் பயில வழங்கவில்லை; இன்னவண்ணமென்பதன் விகாரமெனினும் ஆம்.
(46) கடாவிடை - எருமைக்கடாவாகிய விடை; விடை, எருமையின் ஆணுக்கும் வரும். (பி-ம்.) ‘ஊர்தியாற்’.
(47) அடாது - பொருந்தாது.
(42-7) விதியை விலக்கி அடியார்க்கு அருள் செய்தலை மார்க்கண்டேயருக்காக உதைக்கப்பெற்ற யமனிடத்தே கண்டும்.
|