தெரித்துமற் றிவ்வா றருச்சனை புரிதிரென்
றங்கையற் கண்ணி பங்கில்விற் றிருந்த
10.
செக்கர் வார்சடைச் சொக்கநா யகனை
ஈரெண் டிறத்துப சானமும் வாய்ப்பப்
பூசனை புரியுந் தேசிக ராய
மழைக்குலந் தழைப்பத் தழைத்ததீம் பலவின்
வேரிடைப் பழுத்துப் பாரினுட் கிடந்த
15.
முட்புறக் கனிகள் விட்புறக் காண்டலும்
சிறுகண் மந்தி குறிவழிச் சென்று
கீண்டுபொற் சுளைபல தோண்டுவ தம்ம
முற்பக லொருவர் பொற்குட நிரம்பப்
புதைத்தனர் வைத்த நிதிக்குழா மனைத்தும்
20.
வஞ்சகம் பழகு மஞ்சனக் கள்வர்
கண்டுகண் டெடுக்குங் காட்சித் தன்ன
தண்டலை வளைஇத் தடமதி லுடுத்த
தேசுலாங் கமலைத் திருநகர் புரக்கும்
மாசி லாமணி ஞானசம் பந்த
25.
வாக்கு மனனும் யாக்கையு மொன்றாச்
சொற்றரு கரண மற்றிவை மூன்றும்
நின்புகழ் நவிற்றியு நினைத்துநின் றுணைத்தாள்
அன்புட னிறைஞ்சியு மின்பமுற் றனவால்