| பரமா னந்தப் பரவையுட் டோன்றிய | இன்பவா ரமுதமவ் வமுதம் | அன்பருக் கெளிதெளி தரிதுவிண் ணவர்க்கே. | | |
நேரிசை வெண்பா 591. | விண்மணியாய்க் காண்போர் விழிக்குட் பொலிந்ததுணைக் | கண்மணியாய் நின்றெவையுங் காட்டுமால் - ஒண்மணிச்சூட் | டம்மா சுணந்த னணிமுடிமேற் கொண்டிருந்த | | | | |
கட்டளைக் கலித்துறை 592. | இன்றோர் வியப்புள தான்மாசி லாமணி யென்றிருப்ப | தொன்றோர் மணிகண் டவர்பல ராலதற் கோர்மருங்காய் | நின்றோர் பலபல பேதங்க ளாச்சொல்வர் நீக்கமறச் | சென்றோர்மற் றிம்மணி செம்மணி யேயென்று செப்புவரே. | | | |
(21) பரமானந்தப்பரவை - பேரின்பமாகிய கடல்.
யாம் இன்பம் ஆர்ந்தனம்; அதுவே, என்று துதிப்ப நிறீஇத் தோன்றிய அமுதம்; அவ்வமுதம் அன்பருக்கெளிது; விண்ணவர்க்கு அரிதென்க.
591. விண்மணி - சூரியன். துணைக்கண்மணி - இரண்டு கண்களிலுமுள்ள மணிகள். மணியாகிய சூட்டையுடைய அம்மாசுணம்; சூட்டு - உச்சி; மாசுணம் - பாம்பு. மாசுணத்தைத் தன் அணிமுடியின்மேற் கொண்டிருந்த. (பி-ம்.) ‘மாசுணந்தள்ளி யம்முடிமேற்’. பாம்பு தன் முடிமேல் மணியைக் கொள்வது இயல்பு; இம்மணி ஆசிரியமூர்த்தியாக எழுந்தருள்வதற்கு முன்பு பாம்பைத் தன்முடிமேற் கொண்டிருந்த தென்றவாறு.
592. மாசிலாமணி யென்னும் ஒரு மணியைக் கண்டோர் பலர்; நீங்கி நின்று ஒவ்வொரு பாலிருந்து பார்த்தோர் தத்தமக்குத் தோற்றியபடி அதனை வெவ்வேறாகக் கூறுவர்; அதனை நெருங்கிச் சென்று கண்டோர் அது செந்நிறத்தையுடைய மாணிக்கமேயாமென்பர். இந்த ஞான தேசிகரைக் கண்டோர் தத்தம் அறிவு நிலைக்கேற்ப்ப் பல படியாகக் கூறினும், இவரை அணுகினோர் இவர் சிவபெருமானிம் வேறல்லரென்று உணர்வாரென்பது கருத்து. வியப்பு யாதெனினென்பதை வருவிக்க. மாசிலாமணி யென்று ஒன்று உண்டு; அவ்வொரு மணியைக் கண்டவர். செம்மணி - மாணிக்கம், சிவபெருமான்; ‘ணிவனெனு நாமந் தனக்கே யுடைய செம் மேனியெம்மான்” (தே.)
|