நேரிசை யாசிரியப்பா 593. | ஏழுயர் மும்மதச் சூழிமால் யானை | தடம்புனல் குடைந்து படிந்தெழுந் துழக்கத் | தெண்டிரை சுருட்டுங் குண்டகழ் வாவியிற் | பங்கயத் தவிசிற் பசும்பொற் றாதளைந்5. | தங்கம் வேறுபட் டரசனம் பொலிதலும் | ஆவலிற் படர்ந்த சேவல்கண் டயிர்த்துநம் | பேடையன் றிதுமல ரோடையு மன்றே | படரும்வெண் டாமரை படர்ந்ததை யன்றிது | கடவுள ரமுதங் கடைந்தபாற் கடலே10. | காந்துவெங் கனற்கட் களிறுமன் றிதுகடற் | சாய்ந்தெழு மந்தரத் தடங்கிரி யதுவே. | போகுவா லுறுப்பும் புழைக்கையுந் தைவரு | பாகரோ வாசுகி பற்றும்வா னவரே | பொங்கிவெண் ணிலவு பொழிந்தவெண் டரளமன்15. | றிங்கிது வங்கதி லெழுந்தவா ரமுதே | கொடிவிடு பாசடைக் குழாமன் றிங்கிதக் | கடலிடைத் தோன்றிய கற்பகா டவியே | | | | | | | | | | | | | | | | |
593. (அடி, 1-26) இவ்வடிகளில் திருவாரூரிலுள்ள தடாகத்திற்குப் பாற்கடல் உவமையாகக் கூறப்படும்.
(1-2) ஏழு உயர் யானை - ஏழுமுழம் உயர்ந்த யானை; சீவக. 775 ந.
(5-6) அரசனமென்றது இங்கே பேடையை. சேவல் - ஆணன்னம். அயிர்த்து - ஐயமுற்று.
(7) (பி-ம்.) ‘ஓடை யன்றே’.
(8-9) வெண்டாமரையின் மிகுதி அத்தடாகத்தைப் பாற்கடலாகத் தோற்றச் செய்தது.
(10-11) யானைக்கு மந்தரமலை உவமை.
(12-3) போகுவால் - நீண்ட வால். துதிக்கைக்கு வாசுகியின் தலைப்பக்கமும், வாலுக்கு அதன் வாற்பக்கமும், பாகருக்குத் தேவரும் உவமைகள். அசுரரும் கடைந்தாராயினும் சிறப்பு நோக்கி வானவரென்றார்; அசுரரும் வானத்தில் வாழ்தலின் வானவரென்பது அவரையும் உள்ளிட்டதாக்க் கொள்ளுதலும் பொருந்தும்.
(14-5) முத்தின் தொகுதிக்கு அமுதம் உவமை.
(16-7) கொடி - தாமரைக் கொடி முதலியவை. பாசடைக் குழாம் - பசிய இலையின் தொகுதி; அதற்குக் கற்பகாடவி உவமை.
|