றாயதன் வடிவமா யமர்ந்தமா நிதியே
20.
சங்கமன் றிதுவதன் றனிப்பெயர் நிதியே
செங்கிடை யன்றிது சிந்தா மணியே
ஆதலி னமதுபேட் டன்னமு மன்றிதப்
போதிலங் குதித்த பொலங்கொம் பன்றே
என்றுள மருளவோ ரெழினலம் பயக்கும்
25.
மன்றலம் பணைசூழ் மருத வேலிப்
பொன்மதிற் கமலை நன்னகர் புரக்கும்
தேசிக ராய சிற்பர முதல்வ
மாசி லாமணி ஞானசம் பந்த
எனையாட் கொள்ளவந் தெய்தினை யாகலின்
30.
முனியா தொன்றிது மொழிகுவன் கேண்மதி
கற்றன ராயினுங் கல்லா ராயினும்
அற்றனம் யாமென வடைந்தனர் தமையெனிற்
காலம் பாரார் கருத்தினை யளவார்
சீல நோக்கார் தீக்குணங் கொள்ளார்
35.
பரிசிலர் வேண்டிய பரிசுமற் றெல்லாம்
வரிசையோ டளிப்பது வள்ளியோர் கடனே
நன்னெறிப் படரா நலமிலி யாயினும்
செந்நெறிப் படர்ந்தநின் சீர்புனைந் தே்தலிற்
சத்திநி பாதநின் சந்நிதிப் பட்ட
40.
இத்திறத் தெளிதினி லெய்திய தெனக்கே, அதனாற்