பக்கம் எண் :

காசிக் கலம்பகம்459

காசிக் கலம்பகம்


நேரிசை வெண்பா
599.
பாசத் தளையறுத்துப் பாவக் கடலகலக்கி
நேசத் தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற
காரார் வரையீன்ற கன்னிப் பிடியளித்த
ஓரானை வந்தெ னுளத்து.    
(1)

மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா

-தரவு-
600.
(1) நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியான
கார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்க
இடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்
சடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக்
கண்பதுவு கடவுண்மணி தெரிந்தமரர் கம்மியன்செய்
விண்கதுவு பொலங்குடுமி விமானத்தின் மிசைப்பொலிந்தோய்.
(2)
நிற்பனவுந் தவழ்வனவு நடப்பனவு மாய்நிலத்துக்
கற்பமள விலகண்டு முறுகளைகண் காணாமே
பழங்கணுறு முயிர்கடுயர்க் கடனீத்துப் பரங்கருணை

    599. நேசத்தளை - அன்பாகிய தளை; “தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி” (திருவிளை. கடவுள்.) விநாயகரை யானையென்றதற்கு ஏற்ப யானையின் இயல்புகளாகிய தளையறுத்தலும் கடல் கலக்கலும் மீட்டும் தளைப்படுத்தலும் கூறினார். வரை - இமயமலை. கன்னிப்பிடி - உமாதேவியார். ஓர் ஆனை - விநாயகக் கடவுள்.

    600. (தரவு) 1. பெருந்தடங்கண் - விசாலாட்சியம்மை; “கயலார் தடங்கண்ணாள் காந்தன்” (604). (பி-ம்.) ‘இன்னமிர்தம்’. திரைக்கைப் பெண்ணமிர்து - கங்கை. (பி-ம்.) ‘பெண்ணமிர்தம்’. அமரர் கம்மியன் - தேவதச்சனாகிய விசுவகர்மா. (பி-ம்.) ‘மிசைப்பொலிவோய்’.

    (2) நிற்பன - அசரம். தவழ்வனவும் நடப்பனவும் - சரம். களைகண் - துன்பத்தை நீக்கும் துணை. பழங்கண் - துன்பம். பழமறையின் முதலெழுத்து - பிரணவ மந்திரம். வரையாது - இன்னார்க்குரியது. இன்னார்க்குரியதன்று என்று கொள்ளாமல்.