பக்கம் எண் :

460குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வழங்குபர மானந்த மாக்கடலிற் றிளைத்தாட
உரையாத பழமறையின் முதலெழுத்தி னொண்பொருளை
வரையாது கொடுத்திடுநின் வள்ளன்மை வாழ்த்துதுமே.

-தாழிசை-
1.
நீரெழுத்துக் கொத்தவுட னீத்தார்க்கு நீநவில்வ   
தோரெழுத்தே முழுதுமவ ரெவ்வண்ண முணர்வதுவே.   

2.
என்பணிவ துடுப்பதுதோ லெம்பிரான் றமர்க்களவர்   
முன்பணியும் பேறுடையார் திசைமுகனு முகுந்தனுமே.   

3.
செடிகொண்முடைப் புழுக்கூடே சிற்றடியோ மிடுதிறைமற்
றடிகளடி யார்க்களிப்ப தானந்தப் பெருவாழ்வே.

4.
பற்பகனோற் றருந்தவரும் பெறற்கரிய பரந்தாமம்   
எற்புடல்விற் றளியேமுங் கொளப்பெறுவ திறும்பூதே.   

5.
நிணம்புணர்வெண் டலைக்கலன்கொ னேரிழைமுத் தித்திருவை
மணம்புணர்வார்க் கையனருண் மணவாளக் கோலமே.

    (தாழிசை.) 1. நீரெழுத்து - நீரில் எழுதப்படும் எழுத்து; “நீரிலெழுத்தாகும் யாக்கை” என்று முன்னும் கூறினார். ஓரெழுத்து - பிரணவம்.

    (2) எம்பிரான் தமர்கள் அணிவது என்பு; உடுப்பது தோல்; ஆயினும் அவர்முன் பணியும் பேறுடையார் திசைமுகனும் முகுந்தனுமே.

    1-2. இத்தலத்தில் இறந்தோர் பிரணவோபதேசம் பெற்றுச் சிவசாரூபத்தை யடைவரென்பது புராண வரலாறு. இக்கருத்தையே இந் நூலிற் பல விடங்களிற் பல படியாக எடுத்தாளுவர்.

    3. செடி - நாற்றம். முடை - புலால் நாற்றம். புழுக்கூடென்றது உடலை. திறை - காணிக்கை. அடிகள் - தேவரீர்.

    4. பரந்தாமம் - முத்தி (655). எற்புடல் - எலும்பாலாகிய உடல். இறும்பூது - வியப்பு.

    5. சாரூபம் பெற்றார் தலைமாலை பெறுதலின் இது கூறினார். மணவாளக் கோலமுடையார் மணமுடைய மலர்மாலை பெறுதல் வழக்காக இருப்ப, முத்தித் திருவை மணந்த இவர் தலைமாலை பெறுதல் ஏற்புடையதோ வென்றார். முத்தித் திருவை மணம் புணர்வார்: “கடியிருக்கு நறைக்குழன்முத் தித்திருவை முயங்கிடவுங் கடவேன் கொல்லோ” (637).