பக்கம் எண் :

காசிக் கலம்பகம்461

6.
முடைத்தலையிற் பலிகொள்வான் மூவுலகு மவரவர்தங்
கடைத்தலையிற் றிரிவதுகொல் யாம்பெறுநின் காணியே.

-அராகம்-
1.
உளதென விலதென வொருவரொ ரளவையின்
அளவினி லளவிட லரியதொ ருருவினை.
2.
இதுவென லருமையி னெழுதரு மொழிகளும்
அதுவல வெனுமெனி னுவருனை யறிபவர்.
3.
அவனவ ளதுவெனு மவைகளி னுளனலன்
எவவை னிவனென வெதிர்தரு தகைமையை.
4.
அறிபவ ரறிவினு ளறிவுகொ டறிவுறு
நெறியல தொருவரு மறிவரு நிலைமையை.

-நாற்சீரோரடி அம்போதரங்கம்-
ஆணொடு பெண்ணுரு வமைத்து நின்றனை.
பூண்முலை கலந்துமைம் புலனும் வென்றனை.
எண்வகை யுறுப்பினோ ருருவெ டுத்தனை.
தொன்மறைப் பனுவலின் றொடைதொ டுத்தனை.

-முச்சீரோரடி அம்போதரங்கம்-
வடவரை குழைய வளைத்தனை.
மலைமகண் முலைக டளைத்தனை.
விடமமிர் தமர விளைத்தனை.
விசயனொ டமர்செந் திளைத்தனை.
வரிசிலை வதனை யெரித்தனை.
மதகரி யுரிவை தரித்தனை.
அருமறை தெரிய விரித்தனை.
அலகில் பல் கலைக டெரித்தனை.

    6. சாரூபம் பெறுவோர் பிச்சை கொள்ளுதலைக் கூறுவர். பலிகொள்வான் - பிச்சை ஏற்றற்பொருட்டு. அவரவர்தம் - உலகிலுள்ளாராகிய அவரவருடைய. கடைத்தலையில் - வாயிலில். காணி - உவமை.

    (அராகம்.) 1. அளவை - பிரமாணம்.

    (நாற்சீரோரடி அம்போதரங்கம்.) பூண்முலை - உமாதேவியார். எண்வகை உறுப்பு - பிருதிவி முதலிய அட்ட மூர்த்தம்.

    (முச்சீரோரடி அம்போதரங்கம்.) வடவரை - மேருமலை. அமிர்து அமர - அமிர்தத்தை ஒப்ப. விசயன் - அருச்சுன்ன். உரிவை - தோல்.