பக்கம் எண் :

46குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

25.
வீக்குஞ் சிறுபைந் துகிற்றோகை
   விரியுங் கலாப மருங்கலைப்ப
விளையாட் டயரு மணற்சிற்றில்
   வீட்டுக் குடிபுக் கோட்டியிருள்

சீக்குஞ் சுடர்தூங் கழன்மணியின
   செந்தீ மடுத்த சூட்டடுப்பிற
செழுந்தாட் பவளத் துவரடுக்கித்
   தெளிக்கு நறுந்தண் டேறலுலை

வாக்குங் குடக்கூன் குழிசியிலம
   மதுவார்த் தரித்த நித்திலத்தின்
வல்சி புகட்டி வடித்தெடுத்து
   வயன்மா மகளிர் குழாஞ்சிறுசோ

றாக்கும் பெருந்தண் பணைமதுரைக்
   கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
   அமுதே தாலோ தாலேலோ.        
(2)

26.
ஓடும் படலை முகிற்படலம்
   உவர்நீத் துவரி மேய்ந்துகரு
ஊறுங் கமஞ்சூல் வயிறுடைய
   உகைத்துக் கடவுட் கற்பகப்பூங்

    25. (அடி, 1) வீக்கும் - கட்டிய. துகில் தோகை - ஆடையின் தலைப்பு. கலாபம் - ஒருவகை மேகலை. மருங்கு - இடை. சிற்றிலாகிய வீட்டில்.

    (2) அழலுகின்ற மாணிக்கமாகிய தீயை மடுத்த; மடுத்த - வைத்த. சூட்டடுப்பு - ஒருவகை யடுப்பு. பவளமாகிய துவர்; துவர் - விறகு. தேறல் உலை - தேனாகிய உலைநீர்.

    (3) குடக்கூன் குழிசி - குடம்போன்ற வளைந்த சங்காகிய பானை. வல்சி - அரிசி. வயல் மா மகளிர் - மருதநிலத்தில் வாழும் சிறுமியர்.

    (4) தண்பணை - மருதநிலம். அருள் சூற்கொண்ட கண் என்க. மருத நிலத்திலுள்ள சிறு பெண்கள் சிற்றிலில் மாணிக்கமே தீயாகவும் பவளமே விறகாகவும் தேனே உலைநீராகவும் சங்கே பானையாகவும் முத்தே அரிசியாகவும் கொண்டு சிறுசோறாக்கி விளையாடும் செயல் இதிற் கூறப்பட்டது.

    26. வாளையின் செயல் இதில் கூறப்படும்.

    (அடி, 1) படலை முகிற்படலம் - தொகுதியாகிய மேகப் பரப்பு. பமஞ்சூல் - நிறைந்த கருப்பம்.