பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்47

காடுந் தரங்கக் கங்கைநெடுங்
   கழியு நீந்தி யமுதிறைக்கும்
கலைவெண் மதியின் முயறடவிக்
   கதிர்மீன் கற்றை திரைத்துதறி

மூடுங் ககன வெளிக்கூட
   முகடு திறந்து புறங்கோத்த
முந்நீ ருழக்கிச் சினவாளை
   மூரிச் சுறவி னோடும்விளை

யாடும் பழனத் தமிழ்மதுரைக்ய
   கரஞே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
   அருதே தாலோ தாலேலோ.        
(3)

27.
ஊறுங் கரடக் கடத்துமுகந்
   தூற்று மதமா மடவியர்நின்
றுதறுங் குழற்பூந் துகளடங்க
   ஓட விடுத்த குங்குமச்செஞ்

சேறு வழுக்கி யோட்டறுக்கும்
   திருமா மறுகி லரசர்பெருந்
திண்டே ரொதுங்கங் கொடுஞ்சிநெடுஞ்
   சிறுதே ருருட்டுஞ் செங்கண்மழ

    (2) கங்கையாகிய கழியென்க; கழி - இங்கே ஆறு. திரைத்து - சுருட்டி.

    (3) ககனவெளிக் கூட முகடு - வானவெளியாகிய அண்ட கூடத்தின் உச்சி. புறங்கோத்த முந்நீர் - அண்டத்திற்கு அப்புறத்திலுள்ள கடல் (பி-ம்.) ‘மூரிச்சுறவோ டுகண்டுவிளை’.

    (முடிபு.) வாளை உவரி மேய்ந்து உகைத்து நீந்தித் தடவித் திரைத்து உதறித் திறந்து உழக்கி விளையாடும் பழனமென்க.

    27. (அடி, 1) கரடம் - மதம்பாய் சுவடு. கடம் - குடம்; கும்பமெனவும் வழங்கும். மதமா - யானை.

    (1-2) மதமாவானத் சேற்றில் வழுக்கி ஓடுதலைத் தவிர்க்கும் மறுகு; வழுக்கி - வழுக்குதலால்; எச்சத்திரிபு.

    (2) சிறுதேர் - அளவிற் சிறிய தேர்.