பக்கம் எண் :

48குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வேறு பொருவே விளைஞர்கட
   விவுளி கடைவாய் குதட்டவழிந
திழியும் விலாழி குமிழியெறிந்
   திரைத்துத் திரைத்து நுரைத்தொருபே

ராறு மடுக்குந் தமிழ்மதுரைக்
   கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
   அமுதே தாலோ தாலேலோ.    
(4)

28.
வார்க்குன் றிரண்டு சுமந்தொசியும்
   மலர்க்கொம் பனையார் குழற்றுஞ்சும்
மழலைச் சுரும்பர் புகுந்துழக்க
   மலர்த்தா துகுத்து வானதியைத்

தூர்க்கும் பொதும்பின் முயற்கலைமேல்
   துள்ளி யுகளு முசுக்கலையின்
துழனிக் கொதுங்கிக் கழனியினெற்
   சூட்டுப் படப்பை மேய்ந்துகதிர்ப்

போர்க்குன் றேறுங் கருமுகிலை
   வெள்வாய் மள்ளர் பிணையலிடும்
பொருகோட் டெருமைப் பொத்தினொடும்
   பூட்டி யடிக்க விடிக்குரல்விட்

    (3) கடவு இவுளி - செலுத்துகின்ற குதிரை. (பி-ம்.) ‘இளைஞர் கடமிவுளி’. விலாழி - குதிரையின் வாய்நுரை. இரைத்து - ஒலித்து. திரைத்து - அலையெறிந்து.

    28. (அடி, 1) வார்க்குன்று இரண்டு - இரண்டு நகில்கள்; வார் - கச்சு.குழலில் துஞ்சும். சுரும்பர் - வண்டுகள். அவை உழக்குதலால் பொதும்பு மலர்த்தாதை உகுத்தது.

    (2) பொதும்பு - சோலை. முயற்கலை - முயலையுடைய சந்திரன். முசுக்கலை - ஆண் குரங்கு. துழனி - ஆரவாரம். பொதும்பிலுள்ள முசுப்பலை. படப்பை - வைக்கோற்போர்; இது தென்பாண்டி நாட்டு வழக்கு.

    (2-3) கதிர்ப்போர்க் குன்று - நெற்கதிர்களை அடுக்கிய போராகிய குன்று. (பி-ம்.) ‘மேய்ந்த கதிர்’. முசுக்கலையின் ஒலிக்கு ஒதுங்கிக் கருமுகில் கதிர்ப்போர்க் குன்றில் ஏறியது.