பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்49

டார்க்கும் பழனத் தமிழ்மதுரைக்
   கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
   அமுதே தாலோ தாலேலோ.    
(5)

வேறு
29.
காரிற் பொழிமழை நீரிற் சுழியெறி
   கழியிற் சிறுகுழியிற்
கரையிற் கரைபொரு திரையிற் றலைபிரி
   கண்டலில் வண்டலினெற்

போரிற் களநிறை சேரிற் குளநிறை
   புனலிற் பொருகயலிற்
பொழிலிற் சுருள்புரி குழலிற்கணிகையர்
   குழையிற் பொருகயல்போய்த் 

தேரிற் குமரர்கண் மார்பிற் பொலிதரு
   திருவிற் பொருவில்வரிச்
சிலையிற் றிரள்புய மலையிற் புலவி
   திருத்திட வூழ்த்தமுடித்    

    (3) வெள்வாய் மள்ளர் - கள்ளையருந்தினமையால் வெள்ளியனவாகிய வாய்களையுடைய மள்ளர்; அவர்கள் கள்ளுண்ட மயக்கத்தால் அறியாமல் முகிலை எருமையோடு பிணையலிட்டனர். (பி-ம்.) ‘பேழ்வாய் மள்ளர்’, ‘பிணையல் விடும்’. பிணையலிடுதல் - பிணைத்தல். எருமைப் போத்து - ஆணெருமை. இடியாகிய குரல்.

    29. கணிகையருடைய கண்கள் கயல்மீமைப்போலப் பல இடங்களிற் பாயுமெனபது இதிற் கூறப்படும்.

    (அடி, 1) காரிலிருந்து பொழியும் மழை, சுழிகளை எறிகின்ற கழி. தலைப்பிரி - உச்சியின்கண் இதழ்பிரிந்து மலரந்த. (பி - ம்) ‘தலைவிரி.’ கண்டல் - தாழை. வண்டல் - மகளிர் விளையாடும் இடம்: வண்டலுள்ள இடமுமாம்.

    (2)சேர் - நெல்லைச் சேமித்துவைக்கும் கூடு. பொழிலைப்போலச் சுருள் புரிந்த குழல். (பி - ம்) ‘சுருள்விரி.’ குழலையுடைய கணிகையர். குழையிற் பொருகையல் - குழையோடு பொருகின்ற கயல்போன்ற கண்கள்.

    (3) தேரிலுள்ள குமரர்கள். பொலிதரு திருவையும் பொருவில்லாத சிலையையும் உடைய திரண்ட புயமாகிய மலை. புலவி திருத்திட - ஊடலை நீக்கும் பொருட்டு; என்றது அவர் கணிகையல் காலில் பணோதலைச் சுட்டியது. ஊழ்த்த - அவிழ்ந்த.