பக்கம் எண் :

50குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தாரிற் பொருதிடு மதுரைத் துரைமகள்
   தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
   தாலோ தாலேலோ.    
(6)

30.
சேனைத் தலைவர்க டிசையிற் றலைவர்கள்
   செருவிற் றலைவர்களாய்ச்
சிலையிற் றிடமுடி தேரிற் கொடியொடு
   சிந்தச் சீந்தியிடும்

சோனைக் கணைமழை சொரியப் பெருகிய
   குருதிக் கடலிடையே
தொந்த மிடும்பல் கவந்த நிவந்தொரு
   சுழியிற் பவுரிகொள

ஆனைத்திரளொடு குதிரைத் திரளையும்
   அப்பெயர் மீனைமுகந்
தம்மனை யாடு கடற்றிரை போல
   அடற்றிரை மோதவெழும்

    (4) துரைமகள் - அரசி.

    கணிகையரது (கண்களாகிய) கயல்கள், மழைநீரிலும் கழியிலும் குழியிலும் கரையிலும் திரையிலும் கண்டலிலும் வண்டலிலும் போரிலும் சேரிலும் புனலிலும் பொருகின்ற கயலைப்போலப் போய் மார்பிலும் புயமலையிலும் தாரிலும் பொருதிடுமென்க.

    30. தடாதகா தேவியின் திக்குவிசயத்தில் நிகழ்ந்த செய்தி கூறப்படும்.

    (அடி, 1) சேனைத்தலைவர்கள் - அம்பிகையின் சேனைத்தலைவர்கள்; எழுவாய். திசையில் தலைவர்கள் செருவில் தலைவர்களாகி வந்து தம்சிலை இற்றிடவும் முடி சிந்தவும். சீந்தியிடும் - கோபிக்கும்; இது கணைக்கு அடை; “சீந்தா நின்ற தீமுக வேலான்” (சீவக. 1055.) (பி-ம்.) ‘தலைவர்களாற்’; ‘சிலையிற்றட்’; ‘சிந்தியிடும்’.

    (1-2) சேனைத்தலைவர்கள், பகைப்படையில் தலைவர்களாகி வந்த திசைத்தலைவர்களுடைய சிலை இற்றிடவும் முடி சிந்தவும் கணைமழையைச் சொரிய, அதனால் பெருகிய குருதிக்கடல். சோனை - விடாமழை. மழை சொரியக் கடல் பெருகியதென்பது ஒரு நயம். தொந்தமிடல் - கூத்தாடல்; பிணைந்தாடலுமாம். பவுரி - சுழன்றாடல்.

    (3.) அப் பெயர் மீன் - யானைமீன்,்குதிரைமீன். யானைமீன்; (தக்க.384, உரை.) அடற்றிரையென்றது குருதிக்கடலின் அலையை.