| தானைக் கடலொடு பொலியுந் திருமகள் | | தாலோ தாலேலோ | | சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி | | |
31. | அமரர்க் கதிபதி வெளிறக் களிறெதிர் | | பிளிறக் குளிறியிடா | | அண்ட மிசைப்பொலி கொண்ட லுகைத்தடும் | | அமரிற் றமரினொடும் | | கமரிற் கவிழ்தரு திசையிற் றலைவர்கள் | | மலையிற் சிறகரியும் | | கடவுட் படையொடு பிறகிட் டுடைவது | | கண்டு முகங்குளிராப் |
| பமரத் தருமிலர் மிலையப் படுமுடி | | தொலையக் கொடுமுடிதாழ் | | பைம்பொற் றடவரை திரியக் கடல்வயி | | றெரியப் படைதிரியாச் |
(4) தானைக் கடல் - சேனா சமுத்திரம்.
31. இதில் உக்கிரகுமாரபாண்டியருடைய வெற்றிச் செயல்கள் கூறப்படும்.
(அடி, 1) வெளிறு அக்களிறு - ஐராவதம். குளிறியிடா - முழங்கி. (பி-ம்.) ‘உகைத்திடும்.’
2. கமர் - வெடிப்பு. திசையிற் றலைவர்கள் - திக்குப் பாலகர்கள்; இவர்கள் இந்திரன் படைத்தலைவராய் வந்தவர்கள். மலையிற் சிறகரியும் கடவுட் படை - இந்திரனது சேனை; கடவுள் படையென்றது ஓசை நோக்கி விகாரமாகி நின்றது. முகம் குளிரா - முகம் குளிர்ந்து. (பி-ம்.) ‘குளிரப்’.
(3) பமரம் - வண்டு. தருமலர் - கற்பகத்தின் மலர். மிலையப்படும். முடி - மிலையும்முடி; என்றது இந்திரனது முடியை; மிலைதல் - சூடுதல். (பி-ம்.) ‘மலையப்’. பைம்பொற்றடவரை - மேருமலை. படைதிரியா - ஆயுதத்தைச் சுழற்றி எறிந்து. இந்திரன் முடிமேல் வளையையும், மேருமலையின் மேற்செண்டையும், கடலில் வேலையும் விட்டனர்.
|