பக்கம் எண் :

காசிக் கலம்பகம்463

எனவாங்கு

-சுரிதகம்-
உலகுசூற் கொண்ட தலைவியு நீயும்
மலைபக வெறிந்த மழவிளங் குழவியை
அமுதமூற் றிருக்குங் குமுதவாய்த் தேறல்
வண்டுகி னனைப்ப மடித்தலத் திருத்திக்
கண்களிற் பருகியக் காமரு குழவி
எழுதாக் கிளவி யுன்சுவை பழுத்த
மழலைநா றமிர்தம் வாய்மடுத் துண்ணச்
செஞ்செவி நிறைத்தநும் மஞ்செவிக் கடிகளென்
புன்மொழிக் கடுக்கொளப் புகட்டின்ன்
இன்னருள் விழைகுவா யிறும்பூ துடைத்தே.    
(2)

நேரிசை வெண்பா
601.
உடையா ளகிலேசர்க் கோங்குமுலைக் கோட்டின்  
அடையாள மிட்டுவையா ளானாற் - கடையிலவர்  
செவ்வண்ணம் பெற்றார் திரளொடுநிற் கின்றாரை  
எவ்வண்ணங் கண்டிறைஞ்சு வேம்.    
(3)

    எனவாங்கு: தனிச்சொல்.

    (சுரிதகம்.) குழவி - முருகக் கடவுள். செஞ்செவி - பொன்னணிந்த செவி. அஞ்செவி சுட்டுப்பெயர் மாத்திரையாய் நின்றது. கடு - விடமு; கடுக்காயுமாம் (699). இன்னருளால் இதனை விழைகுவாய்: இச் செயல் வியப்புடையது.

    (முடிபு.) எனவாங்கு என் புன்மொழிக்கடுக் கொளப்புகட்டினன்; விழைகுவாய்; அங்ஙனம் விழைதல் இறும்பூ துடைத்து.

    601. உடையாள் - உமாதேவியார். அகிலேசர் - விசுவநாதர். கடையில் - உடல் நீங்கிய காலத்தில். அவர் செவ்வண்ணம் பெற்றார் திரளொடு - அப் பெருமானது திருவுருவத்தைப் பெற்றவர்களது கூட்டத்தோடு. நிற்கின்றாரை - நிற்கும் சிவபெருமானை. அடியார் சாரூபம் பெற்ற காலத்தில் நகிற்றழும்பை மாத்திரம் பெறாமையின் அத் தழும்பு இறைவனை அறிந்து கொள்ளுவதற்கு அடையாளமாயிற்றென்றபடி.