296. | இளைய முதுதவ மாற்றுது நோற்றென் | | றுளைவின்று கண்பாடு மூழே - விளிவின்று | | வாழ்நாள் வரம்புடைமை காண்பரேற் காண்பாரும் | | |
297. | நல்லவை செய்யத் தொடங்கினு நோனாமே | | அல்லன வல்லவற்றிற் கொண்டுய்க்கும் - எல்லி | | வியனெறிச் செல்வாரை யாறலைத் துண்பார் | | செலவு பிழைத்துய்ப்ப போல். |
பயனற்ற செயல்களையே செய்து காலம் போக்கியும், பிறர் அறிவுறுத்திக் கூறியும் நற்செயல் செய்ய நடுங்கியும் வாழ்வாரை நினைந்து இரங்கியபடி.
296. இளையம் - நாம் இப்போது இளம்பருவத்தை யுடையேம். முது தவம் ஆற்றுதும் - முதிய பருவத்திலே தவத்தைச் செய்வோம். முது - முதுமை. நோற்று - விரதங்களை மேற்கொண்டு. என்று - என எண்ணி. உளைவின்று - மனத்திற் கவலையின்றி. கண்பாடும் - தூங்குதலும்; தவம் செய்யாது வாளாவிருத்தலைக் குறித்தபடி. ஊழே - விதியின் பயனே; இஃது அங்ஙனம் செய்யாரை நினைந்து இரங்கியபடி, விளிவு இன்று - இளமையிலேயே இறத்தல் இல்லாமல். வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் - தம் வாழ்நாளின் எல்லை நீண்டிருத்தலை அறிந்தாரேல்; அறிதல் அரிதென்றபடி; “சென்றநா ளெல்லாஞ் சிறுவிரல்வைத் தெண்ணலாம், நின்றநாள் யார்க்கு முணர்வரிது” (அறநெறிச்சாரப், 63.) காண்பரேல் கண்பாடும் ஊழென்க. தாழாமே - முதுமை வரும் வரையில் தாமதம் செய்யாமல். காண்பாரும் தவம் நோற்பார்.
“நரைவரு மென்றெண்ணி நல்லறிவாளர், குழவி யிடத்தே துறந்தார்”, “மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது, கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்” (நாலடி, 11, 19) என்பவற்றின் கருத்துக்கள் இச்செய்யுளில் அமைந்துள்ளன.
297. புண்ணிய முடையார்க்கே தவஞ்செய்தல் கூடுமென்பார்.
நோனாமே - செய்வதைப் பொறாமல். ல்லன - பாவங்கள். அல்லவற்றில் - தீய வழியில். கொண்டுய்க்கும் - கொண்டு செலுத்தும் எல்லி - இரவில்; “எல்லியம் போது வழங்காமை முன்னினிதே” (இனியவை. 34) வியல் நெறிச் செல்வாரை - அகன்ற வழியிற் செல்பவரை. செலவு பிழைத்து - செல்லும் வழியைத் தப்பச் செய்து; பிழைத்து - பிழைப்பித்து; “குடிபொன்றிக், குற்றமு மாங்கே தரும்” (குறள்,171) என்பதில் பொன்றுவித்தென்பது பொன்றியென வந்தாற் போன்றது இது. உய்ப்ப போல் - தவறான வழியில் செலுத்துதல் போல.
|