| படவர வுமிழ்தரு மணிவெயில் விடவளர் | | பருதியொ டெழுமுத யத்திற் பொலிந்தன | | பருகுமி னமிர்தென வுருகிரு கவிஞர்கள் | | பனுவலின் மதுரவி சைக்குக் குழைந்தன | | படரொளி விடுசுடம் வலயம தெனவொரு | | பருவரை நெடுவிலெ டுத்துச் சுமந்தன | | பரர்புர மெரியொடு புகையெழ மலர்மகள் | | பணிமுலை தழுவுச ரத்தைத் துரந்தன |
| மடலவிழ் தடமல ரிதழியி னிழிதரு | | மதுமழை யருவிகு ளித்துக் கிளர்ந்தன | | வழிதர வுதிரமு நிணமொடு குடர்களும் | | வருநர கரியின்ம தத்தைத் தடிந்தன | | மதகரி யுரியதள் குலகிரி முதுகினின் | | மழைமுகி றவழ்வதெ னப்பொற் பமைந்தன | | மலிபுகழ் நிலவொடு மடுதிறல் வெயிலெழ | | மதிகதிர் வலம்வரு வெற்பொத் துநின்றன |
| குடவளை துறைதொறு முடுநிரை யெனவரி | | குளிர்நில வெழவுமிழ் முத்தைத் தடங்கரை | | குலவிய படர்சிறை மடவன மொடுசில | | குருகுகள் சினையொட ணைத்துத் துயின்றிடு |
(2) மணிக்குப் பருதி உவமை. உதயத்தின் - உதயகிரியைப் போல. இரு கவிஞர்கள் - கம்பளரும் அசுவதரரும்; தும்புரு நாரதரெனலும் ஆம். பனுவல்- இங்கே, இசைப்பாட்டு. சுடர் வலயம் - ஒளியையுடைய தோள்வளை. பருவரை நெடு வில் - பருத்த மேருமலையாகிய நெடியவில். பரர்புரம் - பகைஞர்களது திரிபுரம். மலர்மகள் பணைமுலை தழுவு சரம் - திருமாலாகிய அம்பு. துரந்தன - எய்தன.
(3) இதழி - கொன்றை. நிணமொடு குடர்களும் வழிதர வரு நரகரி; நரகரி - நரசிங்கம்; அதனைத் தடிந்தது சரபாவதாரங்கொண்டு. மதகரியுரி அதள் - மதகரியை உரித்த தோல். யானைத் தோலுக்கு மேகமும் தோளுக்கு மலையும் உவமைகள். மலிந்த புகழாகிய நிலவோடு. பகைவரை அட்ட பிரதாபமாகிய வெயில் எழ; (பி-ம்.) ‘மலியுமிழ் நிலவொடு’. ஈதலும் அடுதலும் திருக்கரங்கள் புரிதலின் அவ்விரண்டாலும் முறையே உண்டாகும் புகழும் பிரதாபமும் புயங்களைச் சூழ்ந்தன. மதிகதிர் வலம் வருவெற்பு - மேருமலை.
(4) குடவளை - குடம் போன்ற சங்கு; வளைந்த சங்கெனினும் ஆம். உடு நிரை - நட்சத்திர வரிசை; முத்துக்களுக்கு உவமை. குடவளை உமிழ் முத்தை. சினையொடு -முட்டைகளோடு. முத்தை அன்னமும் குருகுனளும் தம்
|