பக்கம் எண் :

காசிக் கலம்பகம்473

கொச்சகக் கலிப்பா
618.
சொல்லா வதுமறையே சொல்லுவது நல்லறமே   
இல்லா வதுமுத்திக் கேதுவா மித்தலமே   
அல்லார் குழலளவு மாகொன் மனம்வயிரக்   
கல்லா விருந்தவா காசிப் பிரானார்க்கே.    
(20)

கட்டளைக் கலித்துறை
619.
பிரானென் றவர்க்கொரு பெண்ணோடு மோடிப் பெருங்கருணை
தராநின்ற காசித் தடம்பதி யார்வந்தென் றன்னகத்தே
இராநின் றனரைம் புலக்கள்வர் கொள்ளையிட் டேகுதற்கே
வராநின்ற போதுள்ள மாதனங் காத்து வழங்குதற்கே.    
(21)


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
620.
வழுத்துமவர்க் கானந்த வாழ்வையருள் வார்காசி
      வளமை யெல்லாம்
கொழுத்ததமி ழாற்பாடித் துளசிமணி தரித்தாடுங்
      கொற்றி யாரே

    618.பாங்கி கூற்று.

    சொல், உபதேசிப்பது, இருப்பிடம் ஆகிய மூன்றும் மிக நல்லனவாயிருந்தாலும் அகிலேசர் திருவுள்ளம் பாதுகாத்தற்கு இசையாதிருத்தலால் கல்லாக இருக்கின்றது; இஃது என்ன வியப்பு! தலைவர் மனத்தைக் கல்லென்றல்; “கணவரவர் நெஞ்சதி கருங்கலலவோ” (அழகர் கலம். 65.)

    619. பிரான் - வண்மையிற் சிறந்தவர்; இது ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திற் கண்டபொருள். ஒரு பெண்ணோடும் - உமா தேவியாரோடும். இத்தலத்தில் இறந்த ஆன்மாக்களை அம்பிகை தன் மடியிற் கிடத்தி இளைப்பாற்ற அகிலேசர் பிரணவத்தை உபதேசிப்பரென்பது புராண வரலாறாதலின், ‘பெண்ணோடு மோடிப் பெருங்கருணை தராநின்ற காசித் தடம்பதியார்’ என்றார்; 636: 27-39, பார்க்க. அகத்தே - மனத்தில். கொள்ளையிட்டு - கொள்ளையிட்டு. உள்ளமாகிய பெரிய நிதியைக் காத்து எனக்கு அதை வழங்குதற்கு இராநின்றன ரென்க.

    620. கொற்றியார் - வைணவ வேடம்பூண்ட பெண். கைச் சங்கம் - கையிலுள்ள வளையல், சங்கு. ஆழி - மோதிரம், சக்கரம். சங்கையும் ஆழியையும் கண்டு திருமாலாக நினைந்து வணங்கினேம். ஆகின் - ஆதலால்