பக்கம் எண் :

காசிக் கலம்பகம்483

ஓதி யோதியி ளைப்பர் வேத
முணர்த்து த்ததுவ முணர்கிலார்
உணரும் வண்ணமனு பவத்தில் வந்திடுமொ
ருண்மை வாசக முணர்த்துகேம்
ஏதி னாலற மனைத்தி னும்பசு
வினைப்ப டுத்தனல் வளர்த்திடும்
யாக மேயதிக மென்ப தன்பர்த
மிறைச்சி மிக்சிலதி லிச்சையார்
ஆதி யாரறிவ ரதுகி டக்கமது
வருந்தி லப்பொழுதி லேபெறற்
  கரிய தோர்பரம சுகம்வி ளைந்திடுவ
ததும் றுத்தவிர வில்லையே.    
(40)

கட்டளைக் கலித்துறை
639.
இல்வாழ்வை விட்டுக் கதிவேட்
    டடைபவர்க் கேழைபங்கன்
நால்வாழ்வை யேதருங் காசிப்
    பிரான்றும் பூங்கடுக்கை
வல்வார் முலைக்கொம்ப னாய்தந்தை
    தாண்மழு வாலெறிந்து
கொல்வா ரொருவருக் கல்லா
    தெவர்க்குங் கொளற்கரிதே.    
(41)

நாயனாருடைய. இறைச்சி - மாமிசம். மிச்சில் - எச்சில். கண்ணப்பநாயனார் உண்டு சுவை பார்த்த எச்சிலாகிய இறைச்சியில் விருப்பமுடையவராகிய ஆதியார் அதிகமென்பதை அறிவாரென இயைக்க. மது - கள். மறுத்த இரவு இல்லை - ஒழிந்த இராத்திரி இல்லை; ஒவ்வொரு நாளும் உண்பரென்றபடி. மறு தவிரவில்லையென உண்மைப் பொருளும் இதன் கண் அமைந்தது; மறு - குற்றம். (பி-ம்.) ‘மறுத்தவ்வை யில்லையே’.

    639. தோழி கூற்று.

    அகிலேசரது கொன்றைமாலையைப் பெற விரும்பிய ஒரு தலைவியை நோக்கி, ‘நீ சண்டேசராகப் பிறந்தால் அதைப் பெறலாம்; அவரை யன்றிப் பிறர் பெறுதற்கு ஆஃது அரிது’ என்றாள் (118, 542).