கட்டளைக் கலித்துறை 642. | புயல்வண்ணக் கண்ணற் கொளித்தவக் | | கள்வன் புணர்ப்பையெண்ணாள் | | கயல்வண்ணக் கண்ணிதன் கண்ணினுட் | | புக்கது கண்டிருந்தும் | | செயல்வண்ணங் கண்டிலள் வாளாப் | | புறத்தெங்குந் தேடுகின்றாள் | | வயல்வண்ணப் பண்ணை யவிமுத்தத் | | |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 643. | வையமுழு தொருங்கீன்ற விடப்பாக | | ரானந்த வனத்தில் வாழும் | | வெய்யதறு கண்மறவர் குலக்கொடியை | | வேட்டரசன் விடுத்த தூதா | | கையிலவன் றிருமுகமோ காட்டிருகண் | | டொட்டுமுட்டைக் கதையிற் றாக்கிச் | | செய்யகொடி றுடைத்தகல்வாய் கிழித்தரிவோ | | |
642. செவிலி கூற்று.
கண்ணன்; இடுகுறிப் பெயர் மாத்திரையாய் நின்றது; “கருங்கண்ணனை யறியாமை நின்றோன்” (திருச்சிற். 53.) புணர்ப்பை - வஞ்சனையை. அகிலேசர் தன் கண்ணினுள்ளே புகுந்ததைக் கண்டிருந்தும்; “கடம்பவனேசனார், கண்புகுந்தென் கருத்து ளிருக்கவும்” (113); “கண்வழி நுழையுமோம் கள்வ னேகொலாம்” (கம்ப. மிதிலைக். 55.) பண்ணை - மருத நிலம்.
அகிலேசரைத் தன் மனத்துள்ளே வைத்திருந்தும், இத்தலைவி அவரைப் புறத்தே தேடுகின்றாள்; இஃது என்ன பேதைமை?
643. தன் மகளை மணஞ்செய்ய விரும்பித் திருமுகம் விடுத்த ஓர் அரசன் தூதனை நோக்கிச் சினந்து மறவர் தலைவனொருவன் கூறியது.
இடப்பாகம் உமாதேவியாராதலின் ‘வையமுழு தொருங் கீன்ற விடப்பாகர்’ என்றார். கண் தொட்டு - கண்களைத் தோண்டி. முட்டு - எலும்பின் பொருத்துவாய்கள். கொடிறு - கன்னம். அரிவோம் - அறுப்போம்.
|