அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 644. | தாக்கு படைவேள் கணைமழைக்குத் தரியா திருகண் மழையருவி | | தேக்கு மிவட்கா னந்தவனத் திருந்தா ருள்ளந் திருந்தார்கொல் | | காக்க வரிய விளவாடைக் காற்றுக் குடைந்து கரந்துவச்சை | | மாக்க ளெனவே முடவலவன் வளைவா யடைக்கு மழைநாளே. |
கட்டளைக் கலித்துறை 645. | மழைவளைக் கும்பொழிற் காசிப் | | பிரான்வெற்பில் வண்டறைபூந் | | தழைவளைக் கைக்கொடுத் தேன்கண்ணி | | லொற்றித் தளரிடைதன் | | இழைவளைக் குங்கொங்கை யூடணைத் | | தாளித் தழையினுள்ளே | | கழைவளைக் குஞ்சிலை வேளனை | | |
644. தோழி கூற்று.
தேக்கும் - நிறைக்கும். உடைந்து - தோற்று. கரந்து - மறைது. வச்சை மாக்கள் - உலோபிகள். அலவன் - நண்டு, “இழைபடப் பெட்யொடு மெள்ளி னள்ளிகள், புழையடைத் தொடுங்கின வச்சை மாக்கள் போல்” (கம்ப. கார்காலப். 121).
மழைநாளில் ஆனந்த வனத்திருந்தார் உள்ளம் திருந்தார் கொல்.
645. பாங்கி கூற்று; இறைவி கையுறையேற்றமை இறைவனுக்கு இயம்பல்.
பொழிலாற் சிறப்புடைய வெற்பென்றமையால் தழைக்குரிய மலரும் தளிரும் அவளுக்கு அரியனவன்றாதலின் நின் தழையை ஏற்றுக் கொண்டது நின்பாலுள்ள அன்புன் பொருட்டே என்பதைக் குறிப்பித்தாளாயிற்று. வண்டுஅறை பூந்தழையென்றனையால் அத்தழை மணமுள்ள மலர்களாலும் தழையாலும் ஆக்கப்பட்டதென்பது போந்தது. வளைக்கை - தலைவியின் வளைக்கையில். கண்ணி லொற்றியது அதன்பாலுள்ள மதிப்பையறிவித்தற்கு; கொங்கையூ டணைத்தது அவள் காதலைப் புலப்படுத்தியது. தளரிடை - தலைவி. தழையினுள்ளே - தழையின் திறத்திற்காட்டிய அன்பின் வழியாக. தழையின்பாற் காட்டிய மதிப்பையும் அன்பையும் அறிந்து அவள் உடம்பாட்டை நீ தெளிந்து கொள்வாயாக.
|