பக்கம் எண் :

488குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
648.
செந்தே னொழுகும் பொழிற்காசி
    சிறுநுண் ணுசுப்பிற் பெருந்தடகட்
பைந்தே னொழுகு மிடப்பாகர்
    படைவீ டென்ப துணராய்கொல்
வந்தேன் வளைந்தா யெமைப்பாவி
    மதனா வினையே விளைந்தபோர்
உய்ந்தே குவதிங் கரிதனற்க
    ணுடையார் மழுவாட் படையாரே.    
(50)


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
649.
படலைநறுங் கடுக்கைமுடிப் பரஞ்சுடரா
    ரிசைபாடிப் பசுந்தேன் பில்கி
மதலவிழ்பூம் பொழிற்காசி மணிமறுகில்
    விளையாடு மதங்கி யாரே
உதலுமெமக் கயிருமொன்றே யோடரிக்கண்
    விளிரண்டு மொழிய வென்னே
தொடலவலைளைத் தடக்கையின்வா ளிரண்டெடுத்து
    வீசிடநீர் தொடங்கு மாறே.    
(51)

    648. தலைவி காமமிக்க கழிபடர் கிளவியாற் கூறும் மன்மதோபாலம்பனம்.

    மன்மதனே, இத்தலம் அகிலேசரது படைவீடென்பதை அறியாயோ: நீ இங்கே வந்தால் பிழைத்தல் அரிது; உன்னை முன்பு எரித்த நெற்றிக்கண்ணையுடைய அவரே இங்கே உள்ளார்.

    பெருந்தடங்கட் பைந்தேன் - விசாலாட்சியம்மை. காசி படைவீடெம்பது: 694. திருக்கோயிலுள்ள இடங்களைப் படைவீடென்பது முருகக் கடவுளுடைய தலங்களை ஆறு படைவீடென்பதனாலும் அறியப்படும். வந்து ஏன் வளைந்தாய். வினையே - நீ வளைந்ததற்குக் காரணம் உனது தீவினையே. விளைந்த - விளைந்தன: பெரயெச்சமுமாம். முன் எரித்த நுதற்கண்ணும், மேலும் பொருதற்கு மழுவாட்படையு முடையாரென்றது நீ உய்தல் அரிதென்பதற்குக் காரணம் புலப்படுத்தியவாறு.

    649. வாளெடுத்துக் கூத்தாடுவாளைப் பார்த்துக் கூறியது. படலை - பூவும் தழையும் விரவித் தொடுத்த மாலை. பரஞ்சுடரார் - அகிலேசர். இசை