பக்கம் எண் :

காசிக் கலம்பகம்489


கலித்தாழிசை
650.
தொடங்காமே பணிமலருந் தூவாமே நல்கும் 
கடங்கால் களிற்றுரியார் காசிவளம் பாடி 
விடங்கான் றகன்றுகுழை மேற்போய்க் குடங்கைக் 
கடங்காத வுண்கணீ ராடுகபொன் னூசல் 
அம்பொன்மலர்க் கொம்பன்னீ ராடுகபொன் னூசல்     
(52)

நேரிசை வெண்பா
651.
பொன்னந்தா தென்னமலர்ப் பூந்துறையிற் புண்டரிகத்
தன்னந்தா தாடு மவிமுத்தல் - இன்னமிர்தா
முன்னங் கடுக்கை முகந்துண்டார் நல்காரே
இன்னங் கடுக்கை யிவட்கு.    
(53)

பாடி விளையாடுமென்க. உடலும் ஒன்று உயிரும் ஒன்று என ஒன்று என்பதை இரண்டற்கும் கூட்டுக. அவ்விரண்டற்கும் இரண்டு கண்களாகிய வாள் இரண்டும் போதுமே; அவற்றையன்றி இரு கைகளிலும் இரு வாள்களைக் கொண்டது என்ன பயன் கருதி? தொடலை வளை - மாலையாகத் தொடுத்த வளை (542 : 1.) தொடங்குமாறு என்? 119-ஆம் செய்யுளையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

    650. பணி தொடங்காமே - தொண்டுகளைச் செய்யத் தொடங்காமலே. மலரும் தூவாமே - அருச்சனை செய்யாமலே. நல்கும் - தண்ணளி செய்யும். இத்தலத்தில் இறப்பவர்கள் யாதொரு பணியும் செய்யாதிருந்தாலும் அவ்விறத்தலே காரணமாகச் சாரூபத்தைப் பெறுவாரென்பதைக் குறிப்பித்தார்.

    கடம் கால் - மதத்தை வெளிவிடும். குடங்கை - உள்ளங்கை. உண்கண் - மையுண்ட கண். பொன் மலர்க்கொம்பு - கற்பகமரத்தின் பூங்கொம்பினை.

    651. தோழி கூற்று.

    பொன்னந்தாது என்ன - பொற்கொடியைப் போல. அன்னம் தாமரைத்தாதில் ஆடும். முன்னம் கடுவைக் கைசில் முகந்து அமிர்தாக உண்டார்; கடு - விடம். இவட்குக் கடுக்கையை இன்னம் நல்கார்; கடுக்கை - கொன்றைமாலையை.