பக்கம் எண் :

காசிக் கலம்பகம்491

கொச்சகக் கலிப்பா
654.
ஆமோ வவிமுத்தத் தையரே பெண்பழிவீண்
போமோ வயிரவர்தஞ் சாதனமும் பொய்யாமோ
தேமோது கொன்றைச் செழுந்தாம நல்காநீர்
தாமோ தருவீ ருமதுபரந் தாமமே.    
(56)

கலிநிலைத்துறை
655.
பரந்தா மத்தைப் பல்லுயிர் கட்கும் பாலிப்பார்
வரந்தா மத்தைப் பின்றரு வதைமுன் வழங்காரேற்
புரந்தா மத்தைப் பொருதரு காசிப் புரமானார்க்
கிரந்தா மத்தை யெனப்புக லீரேந் திழையீரே.    
(57)


நேரிசை யாசிரியப்பா
656.
இழுமென் மழலை யின்னமு துறைப்பப்
பிழிதே னொழுக்கி னொழுகுமின் னரம்பின்
வள்ளுகிர் வடிம்பின் வனம்முனை வருடித்
தெள்விளி யெடுக்குஞ் சீறியாழ்ப் பாண

    654. தலைவி கூற்று.

    இத்தலத்தில் பாவஞ் செய்தவர்க்கு யமதண்டனை இல்லையென்பதும் வயிரவர் தண்டனை மட்டும் உண்டென்பதும் புராண வரலாறுகள். சாதனம் - தண்டனை. பரந்தாமம் - முத்தி (637, 692). ஒரு தாமத்தை தராமல் நிற்கும் தேவரீர் பரந்தாமத்தைத் தருவது எங்ஙன முண்மையாகுமென இதில் ஒரு நயம் தோற்றியது; தாமம்; சிலேடை.

    655. தலைவி கூற்று; பாங்கி விடு தூது.

    பரந்தாமத்தை - முத்தியை. வரம் தாமத்தைப் பின் தருவதை - மேன்மையையுடைய கொன்றைமாலையை இறந்தபின் அளிப்பதை. புரம் தாமத்தைப் பொருதரு - வீடுகள் மலைகளை ஒத்தற்கு இடமான. (பி-ம்.) ‘வரந்தா மத்தைப் தருவதை நீர்பின் வழங்காரேற், புரந்தா மத்திற் பொலிதரு காசிப் புரமானார்க்’. மத்தை இரந்தாமென - ஊமத்த மலரையேனும் யாசித்தோமென்று; மத்து - ஊமத்தை (546). ஏந்திழை யீரென்றது தோழிமாரை.

    நான் இறந்தபின் சாரூபம் பெருங்காலையில் எனக்கு அளிக்கப்படும் கொன்றைமாலையை இப்போதே தருக என்று கேளுங்கள்; இல்லையெனின் அவர் அணியும் ஊமத்தமலரையேனும் கேட்டு வாங்கி வாருங்களென்றாள் தலைவி.

    656. அகிலேசர்பால் திருவருள் பெற்றுப் பெருஞ்செல்வமெய்தி வரும் பாணன் ஒருவன் அவரிடம் செல்லும்படி மற்றொரு பாணனுக்குக் கூறியது.

    (அடி, 1-5) மழலையென்றது இங்கே இன்னொலியைக் குறித்து