பக்கம் எண் :

492குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

5.
வாழிய கேண்மதி மாற்றமொன் றியானும்
ஏழிசைப் பாணன்மற் றிறைமக னலனே
பலவுடன் பழிச்சுவ தொழிகமற் றம்ம
சிலபகல் யானுநின் னிலைமைய னாகி
நலம்பா டறியா விலம்பா டலைப்ப
10.
நீர்வாய்ச் சிதலையு நூல்வாய்ச் சிலம்பியும்
சிலவிட மேய்ந்த சிறுபுன் குரம்பையில்
மசகமு முலங்கும் வாய்ப்படைக் குடவனும்
பசையில் யாக்கைத் தசைகறித் துண்ண
அரும்பசிக் குணங்கியும் பெரும்பிணிக் குடைந்தும்
15.
சாம்பல்கண் டறியா தாம்பி பூத்த
எலிதுயி லடிப்பிற் றலைமடுத் தொதுங்கிச்

நின்றது. உறைப்ப - துளிக்க. தேனொழுக்கு யாழ்நரம்பிற்கு உவமை (சீவக. 559, 722.) உகிர் வடிம்பின் - நகத்தின் விளிம்பினால். வருடி - தடவி. தெள்விளி - தெளிந்த பாட்டு (சீவக. 661.) சீறியாழ்ப்பாண - சிறிய யாழையுடைய பாணனே; பாணர்களுள் சிறிய யாழையுடையோரைச் சிறுபாணரென்று கூறும் வழக்குச் சிறுபாணாற்றுப்படையால் அறியப்பெறுகின்றது, இதனால் இச்செய்யுளும் சிறுபாணாற்றுப்படையாகவே கொள்ளற்குரியது. மாற்றம் ஒன்று கேள்; மதி: அசைநிலை.

    (6-12) தன் பண்டை நிலைமையை விரித்துரைக்கின்றான்.

    (6-7) எதிர்வந்த பாணன் தன்னை ஓரரசனென்று கருதிப் புகழத் தொடங்கினானாதலின் இவன் இங்ஙனம் கூறுவானாயினன். இறைமகன் - அரசன் உடன் - ஒருங்கு.

    (8) நின்னிலைமை யென்றது மிக்க வறுமையுற்ற நிலையை.

    (9) நலம்பாடு - இன்பம். இலம்பாடு - வறுமை (316 : 2-3)

    (10) சிதலை - கறையான். சிலம்பி - சிலந்தி.

    (11) குரம்பையில் - குடிசையில்.

    (12) மசகம் - கொசுகு. உலங்கு - கொசுகுபோல் வதொரு சாதி; “உலங்நகும் மேல்வர வொழிக்கற் பாலதோ” (கம்ப. யுத்த. மந்திரப். 20) வாய்ப்படை - வாயாகிய படையையுடைய. குடவன் - குடவுண்ணி; இது கடித்து இரத்தத்தை உண்ணுவதாதலின் ‘வாய்ப்படைக் குடவன்’ என்றார்.

    (13) கறித்து - கடித்து.

    (14) உணங்கி - வாடி.

    (15-6) “ஆடுநனி மறந்த கோடுய ரடுறப்பின், ஆம்பி பூப்ப” (புறநா. 164 : 1-2.) தலைமடுத்து - சேர்ந்து.