பக்கம் எண் :

காசிக் கலம்பகம்493

சிறுசிறா ரலறப் பெருமனைக் கிழத்தி
குடங்கையிற் றாங்கிய கொடிற்றினள் குடங்கைக்
கடங்கா வுண்க ணாறலைத் தொழுக
20.
அழுகுரற் செவிசுட விழுமநோய் மிக்குக்
களைகண் காணா தலமரு மேல்வையிற்
கடவு ணல்லூழ் பிடர்பிடித் துந்தக்
குரைபுன்ற் கங்கைக் கரைவழிச் சென்றாங்குத்
தேம்பழுத் தழிந்த பூம்பொழிற் படப்பையிற்
25.
கடவுட் கற்பகக் கொடிபடர்ந் தேறி
வான்றொடு கமுகின் மடற்றலை விரிந்து
நான்றன திசைதொறு நறுநிழற் கதலித்
தேங்கனி பழுத்த பூங்குலை வளைப்ப
அம்மலர்க் கொடியிற் செம்முக மந்தி
30.
முடவுப் பலவின் முட்புறக் கனியைப்
புன்றலைச் சுமந்து சென்றிடுங் காட்சி
குடமிசைக் கொண்டொரு கூன்மிடை கிழவன்
நெடுநிலைக் கம்பத்தின் வடமிசை நடந்தென
இறும்பூது பயக்கு நறும்பணை மருதக்
35.
கன்னிமதி லுடுத்த காசிமா நகரம்
பெருவளஞ் சுரக்க வரசுவீற் றிருக்கும்
மழுவல னுயர்த்த வழனிறக் கடவுள்

(18) குடங்கை - உள்ளங்கை. கொடிறு - கன்னம். கன்னத்தை உள்ளங்கையால் தாங்குதல் கவலைமிகுதியைக் குறிப்பிப்பது; “கவுண் மிசைக் கையூன்றி நிற்பாள்” (ஐந். ஐம். 10); “கையணல், வைத்த வெயிற்றியர் வாட்கண் ணிடனாட” (பு. வெ. 12.)

    (21) களைகண் - தன் வறுமையைப் போக்குதற்கு ஆதாரமானவர்களை, அலமரும் - மனம் சுழலும்.

    (24) தேம் பழுத்து அழிந்த - தேனடை முதிந்து சொரிந்த. படப்பை - தோட்டக்கூறு.

    (25) கற்பகக் கொடி - காமவல்லி; எழுவாய்.

    (27) நான்றன - தொங்கினவாகி.

    (27-9) நான்றனவாகிக் கொடிகள் வாழைக்குலையை வளைப்ப.

    (32) கிழவன் மேலே செல்லுதல் மரபு.

    (29-33) 348 : 21-2.