| பொன்னடி வணங்கி யின்னிசை பாடலும் | அந்நிலைக் கண்ணே யகல்விசும் பொரீஇச்40. | சுரபியுந் தருவும் பெருவளஞ் சுரப்ப | இருமையும் பெற்றன்ன் யானே நீயுமத் | திருநகர் வளமை பாடி யிருநிலத் | திருநிதிக் கிழவனேக் கறுப்பத் | திருவொடும் பொலிக பெருமகிழ் சிறந்தே. | | | | | | |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 657. | சிறைவிரிக்கு மதுகரங்கா டேம்பிழிபூம் | பொழிற்காசித் திருநா டாளும் | மறைவிரிக்குஞ் சிலம்படியார் திரள்புயத்துப் | புரளுநறு மலர்ப்பூங் கொன்றை | நறைவிரிக்கு மிதழ்க்கரத்தா லூட்டுமது | விருந்துண்டு நயந்து மற்றென் | குறைவிரித்தோ ரிருவரிசை கூட்டுண்ணுந் | திருச்செவிக்கே கூறு வீரே. | | | | | | | |
கட்டளைக் கலித்துறை 658. | கூற்றடிக் கஞ்சிக் குலையுநெஞ் சேயஞ்சல் கோச்செழியன் | மாற்றடிக் கஞ்சு மிடப்பா கனைமள்ளர் கொன்றகருஞ் | சேற்றடிக் கஞ்ச மலர்வயற் காசிச் சிவக்கொழுந்தைப் | போற்றடிக் கஞ்சலி செய்பற்று வேறு புகலில்லையே. | | | |
(38) யான் பாடலும்; உம்மை உடனிகழ்ச்சி.
(39) ஒரீஇ - நீங்கி.
(40) சுரபி - காமதேனு. தரு - கற்பகமரம்.
(41) இருமையும் - இம்மைப் பயனும் மறுமைப்பயனும்.
(43) இருநிதிக்கிழவன் - குபேரன். ஏக்கறுப்ப - இசை செல்வத்தை யாம் பெற்றிலேமே யென்று வருந்த.
657. தலைவி வண்டைத் தூது விட்டது.
தேம்பிழி - தேனைப் பிழிகின்ற. மதுகரங்காள், கூறுவீர்.
658. அஞ்சல் - அஞ்சாதே. கோ: முடியையுடைய மன்னர்களுக்குரிய அடைமொழி. செழியன் - அரிமர்த்தன பாண்டியன். மாற்றடி - பிரம்படி; மாறு - பிரம்பு; இது பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலால் விளங்கும். கொன்ற - உழுது புளிக்கவைத்த. சேறு அடி - சேற்றினிடத்தே.
|