| செம்பொ னிதழித் தெரியலையே சிந்தித் | திருப்பத் திரண்முலையும் | பைம்பொ னுருவும் பீர்பூத்த பவளச் | செவ்வாய்ப் பசுங்கிளிக்கே. | | | |
கட்டளைக் கலித்துறை 663. | கிள்ளைக் கமிர்த மொழிசாற் | றிடுங்கிஞ் சுகவிதழ்ப்பெண் | பிள்ளைக் கிடந்தந்த காசிப் | பிரான்பிறை யோடுமுடிக் | கொள்ளைச் சிறைவண்டு கூட்டுணுங் | | | | | | |
கலிவிருத்தம் 664. | வாட்ட டங்கண் மழைப்புனன் மூழ்கியே | சேட்டி ளங்கொங்கை செய்தவ மோர்கிலார் | தோட்டி னங்கொன்றை சூடிப்பொ னம்பலத் | தாட்டு வந்த வவிமுத்த வாணரே. | | | |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 665. | நரைமு திரந்தன கண்கள்பஞ் சார்ந்தன | நமன்றமர் வழிக்கொண்டார் | திரைமு திர்ந்துட றிரங்கின திரங்கலை | செயலிது மடநெஞ்சே | | | |
கும்பமிரண்டு - இரண்டு நகில்கள். இதழித் தெரியலையே -கொன்றை மாலையையே. பீர் - பசலை நிறம். பசுங்கிளி - தலைவி.
அகிலேசர் அணிந்த கொன்றைமாலையையே சிந்தித்திருத்தலின் தலைவி பசலைநிறத்தை அடைந்தனள் (343, 507, 552).
663. தலைவி கூற்று. கிஞ்சுக இதழ் - முள்ளு முருக்கம்பூவைப்போன்ற இதழ். பெண் பிள்ளை - உமாதேவியார். கங்கை சந்திரனது திலவால் தின்புறாமல் கொன்றையையும் அதனுடம் சடைமுடிமேல் வைத்தார்; அதனால் அவள் உயிர்தரித்தாள் (524); எனக்கும் கொன்றைமாலையை வழங்கின் சந்திரனால் துன்பமடையேனென்பது தலைவியின் உட்கோள்.
664. தலைவி கூற்று. மழைப்புனலில் மூழ்கி அந்நீரில் நின்று தவஞ்செய்வார்போல என் நகில்கள் கண்ணீரில் மூழ்கித் தவம் புரிவதை அவிமுத்தவாணர் ஓர்கிலார்; ஓர்கிலார் - உணர்ந்து அருள் செய்திலர்.
665. நரைமுதிர்தல் முதலியன மூப்பு நிறைந்து மரண சமயம் குறுகுதற்குரிய அடையாளங்கள். கண்கள் பஞ்சார்ந்தன: “காலன்
|