பக்கம் எண் :

498குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

உரைமு திர்ந்தவர் குழாத்தொடு மடைதியா  
    லொழுக்கொளி முடிக்கங்கைக்  
கரைமு திர்ந்திடாக் கலைமதி முடித்தவர்  
    காசிநன் னகர்தானே.    
(67)

வஞ்சித்துறை
666.
நகர மாய்மறைச், சிகர மானதால்  
மகர மாயினான், நிகரில் காசியே.      
(68)

கட்டளைக் கலித்துறை
667.
இல்லொன் றெனவே னிதயம்புக்
    காய்மத னெய்கணைகள்
வல்லொன்று பூண்முலை மார்பகம்
    போழ்வன மற்றென்செய்கேன்
அல்லொன்று கூந்த லணங்கர
    சோடுமொ ராடகப்பொன்
வில்லொன்று கொண்டவி முத்தத்தி
    லேநின்ற விண்ணவனே.    
(69)

வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே” (பட்டினத்துப்.) திரை - தோலின் சுருக்கம். இரங்கலை - நீ வருந்தாதே. செயல் இது - இப்போது நீ செய்தற்குரிய செயல் பின்னே கூறப்படும் இஃது ஆகும். உரை முதிர்ந்தவர் - கல்வி முதிர்ச்சியையுடைய பெரியோர்.

    கங்கைக்கரையிலுள்ள காசிநன்னகரை அடைதி; இது செயல்.

    666. நகரமாய் - நகரவடிவத்தைக் கொண்டு. மகரம் மாயினான் - ஆணவ மலத்தின் சக்தியை மாய்த்த அகிலேசரது. காசி மறைச்சிகரமானது.

    667. தலைவி கூற்று.

    வல்லொன்று பூண்முலை மார்பகமென்றது பட்டாங்கு கூறியது; “தில்லை யம்பலம்போற், கோலத்தி னாள்பொருட் டாக” (திருச்சிற். 27) என்பதற்கு ‘அம்பலம் போலுமென்னும் உவமை பட்டாங்கு சொல்லுதற்கண் வந்தது’ என்றுபேராசிரியர் எழுதிய உரை இங்கே அறிதற்குரியது. அணங்கரசோடுமென்றது தேவரீர் அணங்கரசோடு இருத்தல் போல, அடியேன் தேவரீரோடு கூடியிருத்தல் வேண்டு மென்னும் கருத்தை உடையது. தேவரீர் பொன் வில்லைக் கொண்டிருந்தும் அது சிறிதும் பயன்படவில்லை யென்பதைப் பிற்பகுதியிற் குறிப்பித்தாள்.