பக்கம் எண் :

காசிக் கலம்பகம்499


மருட்பா
668.
விண்ணமிர்து நஞ்சாம் விடமு ம்மிர்தமாம்
உண்ணமிர்த நஞ்சோ டுதவலாற் - றண்ணென்
கடலொடு பிறந்தன போலுந் தடமலர்க்
கடிநகர்க் காசியுண் மேவும்
மடலவிழ் கோதை மதர்நெடுங் கண்ணே.    
(70)


வஞ்சிவிருத்தம்
669.
கண்ணொ டாவி கருத்துமாய்
உமண்ணி றைந்ததொ ரொண்பொருள்
அண்ணு மாநக ரானதால்
அண்ண லாரவி முத்தமே.    
(71)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
670.
முத்தாடி மடித்தலத்தோ ரிளஞ்சேயை யுலகீன்ற
    முதல்வி யோடும்
வைத்தாடு வீர்பொதுவி னின்றாடு முமக்கிந்த
    வார மென்னே
கொத்தாடு சடையொடுமா னந்தவனத் தேகுறுந்தா
    ணெடும்பூ தத்தோ
டொத்தாடு வீரடிகட் கெல்லோமும் பிள்ளைகளென்
    றுணர்ந்தி டீரே.    
(72)

    668. தலைவன் கூற்று.

    கண்கள் கடலொடு பிறந்தனபோலும். தலைவியின் அருட் பார்வையாகிய அமுதமும் மருட்பார்வையாகிய நஞ்சும் முறையே தேவாமுதத்தை நஞ்சாகவும் விடத்தை அமுதமாகவும் தோற்றச் செய்வன. அவ்விரண்டன் ஆற்றலையும் கூறியபடி.

    கண் அமிர்தம் நஞ்சோடுதவலாலென்றது தலைவி அருட்பார்வையும் மருட் பார்வையும் உடையளாதலைக் குறித்தபடி.

    கடல் - பாற்கடல். அது முதலில் விடத்தைக் கொடுத்துப் பின் அமுதத்தைக் கொடுத்தது; இது பொதுத் தன்மை.

    669. அவிமுத்தம் நகரமானதால்.(பி-ம்.) ‘பொருணண்ணும்’.

    670. சேய் - முருகக் கடவுள். வாரம் - பட்சபாதம். பொதுவில் நின்றாடுவோர் நடுவுநிலை யுடையராயிருத்தல் வேண்டுமன்றோ? பொது - சபை. உணர்ந்திடீர் - உணரும். கருத்து ஒப்புமை: 155, 205.