பக்கம் எண் :

502குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கட்டளைக் கலிப்பா
675.
கருகு கங்குற் கரும்ப டூர்ந்துவெண்
    கலைம திக்கொலைக் கூற்றங் கவர்ந்துயிர்
பருகு தற்குக் கரத்தால் விரிநிலாப்
    பாசம் வீசி வளைத்ததிங் கென்செய்வேன்
முருகு நாறு குழற்பொலங் கொம்பனீர்
    முத்தர் வாழ்வி முத்தமு நெக்குடைந்
துருகு பத்தர்தஞ் சித்தர்முங் கோயிலா
    வுடைய தாதற் குரைத்திடு வீர்களே.        
(77)


       அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
676.
உரைத்த நான்மறைச் சிரத்துமைந் தவித்தவ
    ருளத்தும்வண் டொருகோடி
நிரைத்த பூங்குழ னிரைவளை யவளொடு
    நின்றவ ருறைகோயில்
குரைத்த தெண்டிரைக் கங்கைமங் கையர்துணைக்
    கொங்கைமான் மதச்சேற்றைக்
கரைத்தி ருங்கடல் கருங்கட லாச்செயுங்
    காசிமா நகர்தானே.    
(78)

அஞ்சவைத்தார்; உள் - மனம்; நஞ்சு - நைந்து; போலி. உம்பர் - தேவர். அவர் ஓட்டெடுப்பப் பண்ணிய நஞ்சை. நஞ்சத்தை நச்சுகின்ற அமுதாகக் கொண்ட அகிலேசர் இத்தலைவிக்கு அன்னத்தை நஞ்சாகச் செய்தனரென்றது ஒரு நயம். பச்சைப்பெண் - இளையபெண், பசிய நிறமுடைய உமாதேவியார். பிஞ்ஞகர் அஞ்ச வைத்தாரென்க.

    675. தலைவி கூற்று.

    இருளாகிய எருமையை ஊர்ந்து மதியாகிய யமன் நிலவாகிய பாசத்தை வீசினான்; இது முற்றுருவகம். கரம் - கை. கிரணம். முருகு - நறுமணம். முத்தர் - பாசத்தினின்றும் விடுபட்டவர். நெக்கு - நெகிழ்ந்து.

    பொலங்கொம்பனீர். நாதற்கு உரைத்திடுவீர்களென்க.

    676. ஐந்து - ஐந்து பொறிகளையும்; “ஐந்தவித்தா னாற்றல்” (குறள்: 25.) நிரைவளையவளொடும் - விசாலாட்சியம்மையோடும். குரைத்த - முழங்கிய. கங்கை: எழுவாய். மான்மதச் சேறு - கத்தூரிக்குழம்பு; அது கரிய நிறம் உடையது. இருங்கடல் - பெரிய கடலை.

    கங்கை கரைத்துக் கருங்கடலாகச் செய்தற்கு இடமான காசி உறை கோயிலென இயைக்க.