கட்டளைக் கலித்துறை 680. | முத்திக்கு வேட்டவர் மோட்டுடற் | பார முடைத்தலையோ | டத்திக்குஞ் சாம்பற்கு மோம்பின | ராலிவை யன்றியப்பாற் | சித்திப் பதுமற் றிலைபோலுங் | | | | | | |
கலிநிலைத்துறை 681. | பல்வே றுருவாய் நின்றருள் காசிப் பதியுள்ளீர் | வில்வே றில்லை பூவல தம்பும் வேறில்லை | அல்வே றல்லாப் பல்குழ லாரை யலைக்கின்றான் | சொல்வே றென்னே பார் மனங்கன் றொழிறானே. | | | |
முத்து ஏறுண்டு முத்தால் அடிக்கப்பட்டு. மன்மதன் தன் வில்லை வளைக்கும்போது அதனிடத்திலிருந்து தெறித்த முத்தால் அடிபெற்ற வண்டு ஒலிக்க, அவ்வொலியை மன்மதனது நாணொலியென்று நினைந்து அஞ்சி அறிவழிந்தாள்; இனி மன்மதன் போர் புரியத் தொடங்கிவிடின் இவளுக்கு என்ன துன்பம் உண்டாகுமோ?
மன்மதனது வில் நாணும் வண்டாதலின் அடிபட்ட வண்டினொலியை நாணொலியென்றஞ்சினாள். என் ஆம் - என்ன துன்பம் உண்டாகுமோ? பொன் அசும்பு தசும்பு - பொன் துளிக்கின்ற விமான கலசத்தை. அதனை ஒளி மிகுதியினால் சூரியனென எண்ணித் தாமரை மலர்ந்தது; இது திரிபதிசய அணி.
680. முத்திக்கு - முத்தியை; வேற்றுமை மயக்கம். உடற் பாரத்தை ஓம்பினர். காசியில் இறக்க வேண்டுமென்று எண்ணி அங்கே சென்றடையும் வரையில் உடம்பைப் பாதுகாப்பாரை எண்ணிக் கூறியது இது. சாரூபம் பெற்றவர் முடைத்தலை. என்பு சாம்பலாகியவற்றைப் பெறுவராதலின் அவற்றிற்காக உடம்பை ஓம்பினரென இழிப்புத் தொனிபடக் கூறினர்; 600, தாழிசை பார்க்க. அத்தி - என்பு. கேவலம் - முத்தி. இழிந்த தன்மை.
இது சாரூபம் பெறுதலைப் பழிப்பது போலப் புகழ்ந்தபடி.
681. தலைவி கூற்று.
நவந்தருபேதம், இருபத்தைந்து மூர்த்தம், அறுபத்து நான்கு வடிவம் முதலிய மூர்த்தபேதங்களாகச் சிவபெருமான் எழுந்தருளியிருத்தலின், ‘பல்வேறுருவாய்’ என்றாள். பூவலது வில் வேறில்லை; 177-ஆம் செய்யுளின் குறிப்புரையைப் பார்க்க. அம்பும் அப்பூவேயன்றி வேறில்லை.
|