கட்டளைக் கலித்துறை 682. | தானென் றவர்மு னொளித்தோடித் | தன்னை யிழந்தவர்முன் | யானென்று சென்றிடுங் காசிப் | பிரானுடம் பென்பதென்போ | டூனென்று விட்டொழிந் தார்களிப் | பாருவட் டாதவின்பத் | தேனென் றடைந்தவர்க் குண்ணக் | | | | | | | | |
கட்டளைக் கலிப்பா 683. | தீவி டங்கொடுத் தேயமு துண்டவத் | தேவ ருக்கொளித் துத்திரி கின்றநீர் | பாவி டும்மலர்ப் பஞ்சணை மேலிவள் | பவள வாயமிர் துண்டாற் பழுதுண்டோ | நாவி டங்கொண் டொருவன் முகங்களோர் | நான்கி னுந்நடிக் குந்துர கத்தைவிட் | டாவி டங்கொண் டருட்காசி வீதிக்கே | யாடல் செய்திடு மானந்தக் கூத்தரே. | | | | | | | |
அல்வேறு அல்லாக் குழல்; 667. ஐம்பாலாகப் பகுக்கப்படுதலின் பல்குழலாரென்றாள் (சீவக. 164, ந.) அனங்கனென்ற சொல்லாற்றலால் அவன் தனக்கென ஓருருவமும் இல்லானென்னும் குறிப்புப் பெறப்படும்; “தானு மனங்கன்றனுக்கரும்பு” (தண்டி. 77, மேற்.) இங்ஙனம் பல்லாற்றானும் குறையுடையவனால் யான் துன்புறுகின்றேன்: தேவரீர் அத்துன்பத்தை நீக்க வேண்டுமென்பது எச்சம். இச்செய்யுள் உறுப்புக் குறை விசேட அணி யமைந்தது.
682. தானென்றவர்முன் - அகங்காரத்தை உடையவர்களுக்குமுன். காசிப்பிரானது திருமேனி என்பும் ஊனுமென்று கருதினவர் தம் அறியாமையாற் களிப்பார். அப்பிரானைத் தேனென்றெண்ணி அடைந்தவர் சாரூபத்தைப் பெற்றுத் தீய விடமுண்பரென்பது கருத்து. இறைவனை நீங்கி நின்றோர் களிப்பர், சேர்ந்தோர் விடமுண்பரெனப் பழிப்பது போலப் புகழ்பொருளுடையதாயிற்று; இஃது இலேசவணி.
683. தோழி கூற்று. தேவருக்கும் வேதத்துக்கும் அரியரென்பதை இச்செய்யுளிற் கூறுவர். அமுதத்தைத் தேவரீருக்குக் கொடாமல்விடத்தை அளித்த தேவர்களுக்கு ஒளித்துத் திரிகின்ற நீர் இத்தலைவி தரும் வாயமிர்தை உண்ணலாமே; அங்ஙனம் செய்வதனால் வரும் குற்றம் யாது? ஒருவன்: பிரம தேவர். துரகத்தை - நான்கு வேதங்களாகிய குதிரையை. ஆ இடங்கொண்டருள் - விடையை ஊர்தியாகக் கொண்டருளும்.
|