நேரிசை வெண்பா 684. | ஆனந்த வல்லியுட னானந்தக் கானகத்தே | ஆனந்தக் கூத்தா டருட்கடலை - ஆனந்தம் | கொள்ளத் திளைத்தாடுங் கூடாதே லிப்பிறவி | | | | |
கலிவிருத்தம் 685. | வீர மென்பது வின்மதற் கேகுணம் | கோர மென்பது கொண்டிருந் தாவதென் | ஈர மென்ப திலையிவர்க் கென்றதால் | வார மென்பதி வாழவி முத்தரே. | | | |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 686. | முத்து நிரைத்த குறுநகையீர் முளரிக் | கணையான் கணைகடிகைப் | பத்து நிரைத்தா னினித்தொடுக்கிற் பாவைக் | கொருதிக் கிலைபோலும் | ஒத்து நிரைத்த வுடுநிறையோ டொன்றோ | பலவோ வெனவரும்பூங் | கொத்து நிரைத்த பொழிற்காசிக் குழகற் | | | | | | | | |
நீர் அமுது பெறாத குறையைப் போக்கிக் கொள்வீரென்பாள் போலத் தலைவிக்கு அருள்புரிதலை வேண்டினாள்.
684. ஆனந்தவல்லி - விசாலாட்சியம்மை. ஆனந்தக் கானகம் - காசி. ஆனந்தக் கூத்து ஆடும் அருட்கடல் - விசுவநாதர். அருட்கடலைத் திளைத்து ஆடும்; ஆடும் - ஆடுவீராக. கூடாதேல் - அச்செயல் கூடாதேல். பிறவி வெள்ளத்து இளைத்து ஆடுவீர் - பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து மெலிவுற்று அலைவீர். 685. தலைவி கூற்று.
அவிமுத்தரே, உமக்கு அகோரரென்னும் பெயர் இருந்தும் பகைவரை ஒடுக்கும் வன்மை இல்லை; உம்மை அடைந்தாரைக் காக்கும் ஈரமும் இல்லை; இரண்டுமில்லாத உமக்குச் சொந்தமான குணம் வேறு யாது உண்டு?
வீரமென்பது வில்லையுடைய மன்மதனிடத்திலேயுள்ள குணம். மதற்கே; ஏ பிரிநிலை. அவன் என்னைத் துன்புறுத்துகின்றானென்றபடி. கோரம் - மறம்; இங்கே அகோர வடிவத்தைச் சுட்டி நின்றது. ஆவது என் - உண்டாகும் பயன் யாது? ஈரம் - அன்பு . வாரம் - உரிமையான குணம். வாழ்பதியை அவிமுத்தமாகக் கொண்டவரே.
686. தோழி கூற்று.
|